உங்கள் வங்கிக் கணக்கை வேறு கிளைக்கு மாற்றும் போது இந்த விஷயங்களில் கவனம் தேவை
உங்கள் வங்கிக் கணக்கை, தற்போதைய கிளையிலிருந்து வேறு ஏதேனும் ஒரு கிளைக்கு நகர்த்த விரும்பினால், இதற்காக நீங்கள் தற்போதைய கிளையிலோ அல்லது நீங்கள் மாற்ற விரும்பும் கிளையிலோ ஒரு கோரிக்கையை முன்வைக்கலாம். (Pixabay)
வங்கிக் கணக்கை போர்ட் அதாவது மாற்ற வேண்டுமானால், நீங்கள் எந்த வங்கிக்கு உங்கள் கணக்கை மாற்ற வேண்டுமோ, அங்கு புதிதாக ஒரு KYC ஐ சமர்ப்பிக்க வேண்டும். (PTI)
உங்கள் கணக்கை நீங்கள் போர்ட்டிங் செய்கிறீர்கள் என்றால், அது ஏற்கனவே உங்களிடம் உள்ள காசோலை புத்தகம் அல்லது டெபிட் கார்டில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. அதாவது, அவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. நீங்கள் முன்பு போலவே அவற்றைப் பயன்படுத்தலாம். (Reuters)
நீங்கள் வங்கிக் கணக்கை போர்ட்டிங் செய்யும் போது, அதற்குப் பிறகு, செக் பவுன்ஸ், க்ளியரன்ஸ் அல்லது கலெக்ஷ்னனில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். இவற்றில் பிரச்சனை இருந்தால், அதனால் உங்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடும், நேரமும் அதிகமாகும். (PTI)
பொதுத்துறையின் Bank Of India-ன் வாடிக்கையாளர்கள் அகௌண்ட் போர்டபிலிடி தொடர்பான தகவல்களுக்கு வங்கியின் கட்டணமில்லா எண் 1800 220 229 மற்றும் 1800 103 1906 ஐ தொடர்பு கொள்ளலாம். (Reuters)