CNG விலைகள் குறையக்கூடும்: விரைவில் வருகிறது வாகன ஓட்டுனர்களுக்கு good news
இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டி வரி வகையின் கீழ் கொண்டு வரப்போவதாகவும், நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 7.5 லட்சம் கோடி முதலீடு செய்வதாகவும் பிரதமர் அறிவித்ததை அடுத்து இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்களின் பங்குகள் 4 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்தன. ONGC, GSPL, இந்திரப்பிரஸ்தா கேஸ் லிமிடெட் மற்றும் குஜராத் கேஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலை 4 முதல் 9 சதவீதம் வரை உயர்ந்தன.
தற்போது, இயற்கை எரிவாயுவுக்கு மத்திய கலால் வரி, மதிப்பு கூட்டு வரி மற்றும் மத்திய விற்பனை வரி ஆகியவை விதிக்கப்படுகிறது. VAT விகிதங்கள் வெவ்வேறு மாநிலங்களில் வேறுபடுகின்றன.
VAT விகிதங்கள் மத்திய பிரதேசத்தில் 14 சதவீதமாகவும், உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திராவில் 14.5-14.5 சதவீதமாகவும், குஜராத்தில் 15 சதவீதமாகவும் உள்ளது. CNG-யில் இப்போது மத்திய கலால் வரி 14 சதவீதமாகவும் பல்வேறு மாநிலங்களில் 5 முதல் 24 சதவீத மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுகிறது. இதில் 5 முதல் 18 சதவிகிதம் வரை வாட் ஸ்லாப் விதிக்கப்பட்டால், இவற்றின் விலை குறையும். விலைகள் மலிவானவுடன் அவற்றின் நுகர்வு அதிகரிக்கும். இதன் காரணமாக எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியின் அளவை அதிகரிக்கும். இந்த சாத்தியக்கூறுகளின் காரணமாகத்தான், எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து வருகின்றன. இப்போது, CNG-யின் விலை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பாதியாக உள்ளது.
ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் வருவதால், நிறுவனங்களுக்கு உள்ளீட்டு வரிக் கடன் பெறுவதற்கான வசதி கிடைக்கும். இது அவற்றின் செலவுகளைக் குறைக்கும். நிறுவனங்களின் செலவுகள் குறைவதால் மற்றொரு நன்மையும் கிடைக்கும். இதன் பிறகு நிறுவனங்கள் அதிக கேஸ் சிலிண்டர்களை விற்க முடியும்.
குஜராத் கேஸ் வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் தொழில் வாடிக்கையாளர்கள். 2020-21 நிதியாண்டின் ஒன்பது மாதங்களில், நாட்டில் எரிவாயு நுகர்வு 5.4 சதவீதம் குறைந்து 45,124 மில்லியன் எம்.எம்.எஸ்.சி.எம். ஆகியுள்ளது. இருப்பினும், எல்.என்.ஜி நுகர்வு 0.3 சதவீதம் அதிகரித்துள்ளது. இது இயற்கை எரிவாயுவின் மொத்த நுகர்வுகளில் 55 சதவீதமாகும்.