Wow!! மிகக் குறைந்த விலையில் வருகிறது Apple iPhone: வாங்க ரெடியா இருங்க!!

Sat, 30 Jan 2021-1:00 pm,

இந்த தொலைபேசியை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருகிறது. இருப்பினும், இந்த தொலைபேசியின் விலை மற்றும் வெளியீடு தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஜீ நியூஸின் செய்தியில் கொடுக்கப்பட்ட தகவல்களின்படி, ஆப்பிள் புதிய iPhone SE-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. கிசினாவின் கூற்றுப்படி, ஆப்பிள் iPhone SE பிளஸில் பரந்த அளவிலான டிஸ்பிளே வழங்கப்படலாம். மேலும், இந்த புதிய தொலைபேசியில், பயனர்கள் பெரிய 6.1 இன்ச் டிஸ்ப்ளேவைப் பெறலாம். இந்த தொலைபேசி ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது.

அறிக்கையின்படி, முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட SE தொடர்களைப் போலவே, இந்த iPhone-னிலும் முகப்பு பொத்தான் இருக்காது என்று நம்பப்படுகிறது. இது தவிர, இந்த தொலைபேசியில் ஆப்பிள் ஏ 14 பயோனிக் சிப்செட் பொருத்தப்படலாம். iPhone SE பிளஸ் தொலைபேசிகளில் அடர்த்தியான பெசல்கல்களில் சப்போர்ட் இருக்கக்கூடும். இந்த ஃபோன் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகிய மூன்று வண்ண ஆப்ஷன்களில் வரும்.

அறிக்கையின்படி, iPhone SE பிளஸ்ஸின் விலை சுமார் 36000 ரூபாயாக இருக்கலாம். இந்த விலை அதன் தற்போதைய மாடலை விட 7000 ரூபாய் அதிகம். இருப்பினும் ஒரு புதிய iPhone-ஐப் பொறுத்தவரை, இது மிகவும் மலிவான ஃபோனாகக் கருதப்படுகிறது.

புதிய iPhone SE Plus-ல் பின்புற கேமரா 12 மெகாபிக்சல்களை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 6 போர்ட் லைட்-டின் எப்ஃஎக்ட் இதில் கொடுக்கப்படலாம். இது தவிர, செல்பிக்கு 7 மெகாபிக்சல் முன் கேமரா இருக்கக்கூடும். இந்த ஃபோனுக்கு தண்ணீராலும் தூசியாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறப்படுகிறது. இந்த ஆப்பிள் தொலைபேசியின் சைடில் பவர் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link