Kia EV6 மின்சார வாகனத்தின் புகைப்படங்கள் வெளிவந்தன: லுக்கில் அசத்துகிறது இந்த வாகனம்
கியா கார்ப்பரேஷன் EV6 இன் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பின் முதல் படங்களை வெளியிட்டுள்ளது. EV6 என்பது கியாவின் முதல் BEV ஆகும். இது கியாவின் மின்மயமாக்கலை மையமாகக் கொண்டுள்ளது. EV6 ஒரு சிறப்பு ஆன்லைன் நிகழ்வின் மூலம் மார்ச் 2021 இல் அறிமுகமாகும்.
புதிய உட்புறத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க கூறுகளில் ஒன்று உயர்-வரையறை AVM திரையாகும். திரையின் அகலம் ஓட்டுனருக்கு ஒரு அதிசயமான அனுபவத்தை உருவாக்குகிறது. அதே நேரத்தில் குறைந்த அளவிலான பொத்தான்கள் உள்ளதால், இனிமையான ஓட்டுநர் அனுபவம் கிடைக்கிறது.
வாகனத்தின் விளக்குகளின் வடிவமைப்பில் 'தொடர்ச்சியான' டைனமிக் லைட் அமைப்பு அபாரமான தோற்றத்தை அளிக்கின்றன. வாகனத்துக்குள் உள்ள சீரான காற்றோட்டம், இதற்கு ஒரு மிக நல்ல அமைப்பையும் இயல்பையும் தருகிறது. முன்பக்கத்திலிருந்து காற்று ஓட்டத்தை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, உகந்த ஏரோடைனமிக்ஸிற்காக காரின் தட்டையான தளத்தின் வழியாகவும் காற்றின் கீழும் காற்று செலுத்தப்படுகிறது.
இருக்கைகள் மெலிதான, இலகுரக மற்றும் சமகால வடிவமைப்புகளுடன் உள்ளன. மேலும் இவை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நவீன, அழகான மற்றும் வலுவான கவர்களைப் பயன்படுத்துகின்றன.
வாகனத்தின் சைட் ப்ரொஃபைல், கிராஸ்ஓவர் தாக்கம் கொண்ட அழகிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது நவீன, நேர்த்தியான மற்றும் ஏரோடைனமிக் வடிவமைப்பாகும். பின்புற சக்கர வளைவுகளை நோக்கி வளைந்து செல்லும் கதவுகளின் அடிப்புற கோடுகள், காரின் ப்ரொஃபைலை பெரிதாக்கிக் காட்டுகிறது.
வாகனத்தின் முன்பக்க தோற்றமும், ஜன்னல் கண்ணாடிகளும் இதற்கு ஒரு அழகான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பைத் தருகின்றன. இதன் படங்கள் வெளிவந்ததிலிருந்து வாகன ஓட்டிகள் மற்றும் ஆர்வலர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளது.