7 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் இந்த நாட்டில் Gold Medal, Cash Prize கிடைக்கும்: 6 குழந்தைகளுக்கு silver medal!!
கஜகஸ்தானில் மிகக் குறைந்த மக்கள் தொகை உள்ளது. அதிகமான குழந்தைகளை பெற்றெடுக்கும் குடிமக்களுக்கு அரசு நிதி உதவி செய்கிறது. கஜகஸ்தானில் அதிக குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு 'ஹீரோ மதர்ஸ்' பதக்கம் வழங்கப்படுகிறது.
6 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு கஜகஸ்தான் அரசு வெள்ளிப் பதக்கங்களை வழங்குகிறது. 7 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இதனுடன், பதக்கங்களை வெல்லும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரசாங்கத்திடமிருந்து மாதாந்திர கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. இது தவிர, நான்கு குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைக்கு 21 வயது ஆகும் வரை மாதாந்திர கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
தங்கப் பதக்கம் வென்ற தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் 44 ஆயிரம் டெங்கே (370 அமெரிக்க டாலர் அல்லது 26,270 ரூபாய்) கிடைக்கிறது.
சோவியத் ஒன்றியம் இருந்தபோது, அதிகமான குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு பதக்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் முறை துவக்கப்பட்டது. சோவியத் யூனியன் 1944 இல் 'மதர் ஹீரோயின்' விருதை நிறுவியது. இந்த விருது 10 க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது.