#VjChitra: முல்லையாக மலர்ந்து ஹோட்டலில் வாடிய மலராய் உதிர்ந்த சித்ரா - Pic`s
மக்கள் தொலைக்காட்சியில் தனது சின்னத்திரை பயணத்தைத் தொடங்கிய இவரது பயணம், வேந்தர் டிவி, ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி என நீண்டு, ஒரு ஹோட்டலில் முடிவடைந்துவிட்டது.
சின்னப் பாப்பா பெரிய பாப்பா, மன்னன் மகள், சரவணன் மீனாட்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
பல சீரியல்களில் நடித்துக் கிடைக்காத புகழை பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற ஒரே சீரியலில் பெற்றவர் முல்லை. ”மருமகள் என்றால் முல்லை மாதிரிதான் இருக்கனும்” என்று பல வீடுகளில் ஆசைப்படுவதாக பரவலாக பேசப்படுகிறது
வெற்றிமுல்லையாய் சிரித்து அனைவரின் மனதையும் மலரச் செய்த சித்ரா எனும் முல்லையின் மனம் மணக்காமல் மரத்து போன காரணம் என்ன?
மலரும் மலர்கள் எல்லாம் சில மணி நேரத்தில் வாடிவிடும், ஆனால், மனித முல்லை காலம் வரும் முன்னே காலனிடம் செல்ல துடித்தது ஏன்?
மணத்திற்கு நாள் குறித்தால், மரணத்திற்கான நாளை முடிவு செய்த கொடுமை ஏன் முல்லை?
மலராய் மலர்ந்து தனது புன்சிரிப்பால் அனைவரையும் மலர வைத்த சித்ரா, முல்லை மலராய் வாடியது ஏன்?
விஜயில் விஜயத்துடன் வெற்றி உலா வந்த முல்லையின் வாட்டத்திற்கு காரணம் என்ன?
முல்லையாய் மலர்ந்து சிரிக்கும் சித்ரா, சித்திரமாய் போன மாயம் என்ன?
மணம் பரப்பிய முல்லை, உலகை விட்டு பறந்தது ஏன்?
மணம் வீசி சுகந்தம் பரப்பிய முல்லை வாசமில்லா மலரானது ஏன்? பாண்டியன் ஸ்டோரின் ஆணிவேராய் இருந்த முல்லை அடிமரமாய் சாய்ந்த காரணம் என்ன? முல்லையின் மரணச் செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #RIPChitra என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்காகி வருகிறது.