Safest SUV Cars: உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதுகாப்பான கார்கள் இவைதான்
குளோபல் என்சிஏபி மதிப்பீட்டில், நாட்டின் கார் நிறுவனமான மஹிந்திராவின் XUV 300 சிறந்த மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த காருக்கு வயதுவந்தோரின் பாதுகாப்பிற்காக (Adult Protection) 5 நட்சத்திர மதிப்பீடும், குழந்தை பாதுகாப்புக்கு 4 நட்சத்திரமும் கிடைத்துள்ளன. NCAP சோதனையின்போது, வயது வந்தோருக்கான பாதுகாப்பிற்காக 17 இல் 16.42 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக 49 இல் 37.44 என மதிப்பீடுகள் கிடைத்தன. குளோபல் என்சிஏபி மதிப்பீட்டின்படி XUV300 நாட்டின் மிகவும் பாதுகாப்பான கார் ஆகும். இது குளோபல் என்சிஏபி-யிடமிருந்து ஃபர்ஸ்ட் எவர் சாய்ஸ் விருதைப் பெற்றுள்ளது.
நாட்டின் மற்றொரு பெரிய கார் நிறுவனமான டாடாவின் ஹேட்ச்பேக் கார் ஆல்ட்ரோஸும் குளோபல் என்சிஏபி-யிடமிருந்து நல்ல மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது வயதுவந்தோரின் பாதுகாப்பிற்காக 5 நட்சத்திரங்களையும், குழந்தை பாதுகாப்புக்காக 3 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது. வயதுவந்தோர் பரிசோதனையின் போது இந்த கார் 17 இல் 16.13 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சோதனையின் போது 49 இல் 29 மதிப்பீடுகளையும் பெற்றது. (Photo: AutoCar India)
டாடாவைச் சேர்ந்த மற்றொரு கார், குளோபல் என்சிஏபி மதிப்பீட்டில் மூன்றாம் இடத்தில் நல்ல எண்களைப் பெற்றது. டாடாவின் சப் காம்பாக்ட் எஸ்யூவி நெக்ஸன் வயது வந்தோருக்கான பாதுகாப்பிற்காக 5 நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தை பாதுகாப்புக்கு 3 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றது. சோதனையின்போது, இந்த கார் வயது வந்தோருக்கான பாதுகாப்பில் 17 இல் 16.06 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 49 இல் 25 என மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
நான்காவது இடத்தில் உள்ள மஹிந்திராவின் எம்யூவி கார் மராசோவிற்கும் குளோபல் என்சிஏபி நல்ல மதிப்பீட்டை வழங்கியுள்ளது. குளோபல் என்.சி.ஏ.பி இந்த காருக்கு வயதுவந்தோர் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 2 நட்சத்திரங்களையும் வழங்கியுள்ளது. சோதனையின்போது, இந்த கார் வயது வந்தோருக்கான பாதுகாப்பிற்காக 17 எண்களில் 12.85 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 49 இல் 22.22 என்ற விதத்தில் புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகியின் ஐந்தாவது பெரிய துணை நிறுவனமான ப்ரெஸாவுக்கு குளோபல் என்சிஏபி 4 நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இந்த காருக்கு வயதுவந்தோர் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 2 நட்சத்திரங்கள் மதிப்பீடு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், மாருதியின் எம்யூவி எர்டிகாவுக்கு 3 நட்சத்திர மதிப்பீடு கிடைத்துள்ளது. வயதுவந்தோர் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் எர்டிகாவுக்கு 3 நட்சத்திரங்கள் மதிப்பீடு கிடைத்துள்ளது. (Photo: CarWale.com)