Year Ender 2020: இந்த ஆண்டின் சில சுவாரசியமான Guinness Records உங்கள் பார்வைக்கு
14 வயது இளைஞரான ரென் கியூ சீனாவில் வசிப்பவர். இவருக்கு இருக்கும் சிறப்பு என்னவென்றால், இவர்தான் உலகின் மிக உயரமான இளைஞன். 7 அடி 3 அங்குல உயரம் கொண்ட ரென் தன் உயரத்திற்காக கின்னஸ் சாதனைப் பெற்றார். ரெனுக்கு 3 வயதாக இருந்தபோது, அந்த நேரத்தில் அவரது உயரம் சுமார் 5 அடியாக இருந்தது என்பதை அறியும் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள லீ ஷாட்கவர், மூன்று ஜாம் டோனட்டுகளை மூன்று நிமிடங்களில் சாப்பிட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார். அவர் தனது சவாலை திட்டமிட்ட நேரத்திற்கு 10 வினாடிகள் முன்னதாக முடித்தார். இது தவிர, மூன்று நிமிடங்களில் அதிக சிக்கன் நகெட்ஸ், தக்காளிகள், கிரேவி ஆகியவற்றையும் சாப்பிட்டு 2020-ல் பல சாதனைகளை செய்தார்.
ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க்கை தளமாகக் கொண்ட தடகள வீராங்கனை ஸ்டெபானி மில்லிங்கர், எல்-சீட் ஸ்ட்ராடில் பிரஸ் ஹேண்ட்ஸ்டாண்டிற்கான புதிய கின்னஸ் சாதனை செய்துள்ளார். ஸ்டீஃபைன் மில்லிங்கர் இந்த பயிற்சியை தொடர்ச்சியாக 402 முறை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உடற்பயிற்சி சவாலுக்கு, மேல் உடல் வலிமையும் நெகிழ்வான உடலும் இருப்பது மிகவும் முக்கியம்.
ஸாய்லா என்ற இந்த திறமையான கூடைப்பந்தாட்ட வீரர் வெறும் 30 வினாடிகளில் நான்கு கூடைப்பந்துகளை 307 முறை ஜக்லிங் செய்துள்ளார். இதன் மூலம் இவர் கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ஸோராவர் சிங் என்ற இந்த இந்தியர் ஸ்கேட்டிங் ரோலர் ஸ்கேட்களில் உலக சாதனை படைத்துள்ளார். ஜோராவர் சிங் 30 வினாடிகளில் ரோலர் ஸ்கேட்களில் 147 முறை ஸ்கிப் செய்து கின்னஸ் உலக சாதனையை முறியடித்து தனது பெயரை புதிய சாதனையில் சேர்த்துள்ளார். 21 வயதான ஜோராவர் முன்பு உயர்நிலைப் பள்ளியில் டிஸ்கஸ் வீசுபவராக இருந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட ஒரு காயத்திற்குப் பிறகு, அவரால் அந்த விளையாட்டை தொடர முடியவில்லை. தனது உடற்திறனை மேம்படுத்த அவர் ஸ்கிப்பிங் செய்யத் தொடங்கினார்.