சுக்கிரனின் அருளாசி பெற்று ஓஹோ என வாழப்போகும் ராசிகள்! அக்டோபர் 13 வரை பொறுத்துக்கோங்க!

Thu, 26 Sep 2024-8:23 pm,

வலுவான சுக்கிரன், அனைவருக்கும் நல்லது செய்வார். மகிழ்ச்சி மற்றும் வளமையான வாழ்க்கைக்கு வழி செய்யும் சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு ஓஹோ என்று அமோகமான வாழ்வைக் கொடுப்பார்

சுக்கிரன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நல்ல விஷயங்களை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கும். பிள்ளை செல்வம் வேண்டியவர்களுக்கு, அந்த வரத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். நண்பர்களுடனான உறவு மேம்படும்

வர்த்தகம் மற்றும் நிதித்துறையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சுக்கிரனின் ஆசி அற்புதமான பலன்களைத் தருவம், மீன ராசியினருக்கு தொழில் விருத்தி, பணியிடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்

சுக்கிரப் பெயர்ச்சியால் விருச்சிக ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சிபொங்கும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சனைகள் சாதகமாக மாறும்

விஜயதசமிக்கு பிறகு நடைபெறும் சுக்கிரனின் சஞ்சார மாற்றம் கன்னி ராசிக்கு அருமையானதாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும், உறவுகள் நெருக்கமாவார்கள்

சிம்ம ராசியினருக்கு சுக்கிரனின் சஞ்சாரத்தால் நிம்மதி கிடைக்கும். வாழ்வின் முக்கியமான காலகட்டமாக இருக்கும் இந்த சமயம் பொருளாதாரத்தில் உங்களை தூக்கி நிறுத்திவிடும்

மேஷ ராசியினரின் கவலைகள் எல்லாம் தூரப்போகும் நேரம் இது. மனதில் மகிழ்ச்சி பொங்கும். வராக்கடன் எல்லாம் வந்து சேரும்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link