இணையும் ராகு - புதன்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகமாகும் - வாழ்க்கையே மாறும்

Sun, 29 Dec 2024-1:21 pm,

இன்னும் சில நாள்களில் புத்தாண்டு பிறக்க உள்ளது. ஜோதிடத்தின்படி, இந்த புத்தாண்டில் பல்வேறு கிரகங்கள் பெயர்ச்சி அடைய இருக்கின்றன.

குறிப்பாக, ராகு மற்றும் புதன் கிரகங்கள் வரும் புத்தாண்டின் தொடக்க கட்டத்தில் ஒரு ராசியில் இணைய (Rahu Mercury Conjunction 2025) உள்ளன.

ராகு பகவான் தற்போது மீன ராசியில் (Pisces) இருக்கிறார். அந்த வகையில், புதன் கிரகமும் வரும் பிப்.27ஆம் தேதி இரவு 11.46 மணிக்கு மீன ராசியில் சஞ்சரிக்கிறது.

மீன ராசியில் ராகு - புதன் கிரகங்கள் இணைவதால் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். புத்தாண்டில் அந்த மூன்று ராசிகளுக்கான (3 Zodiac Signs) பலன்களை இங்கு காணலாம்.

விருச்சிகம் (Scorpio): வரும் புத்தாண்டு இவர்களுக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். வணிகத்தில் பொருளாதார வளர்ச்சியை அளிக்கும் பல்வேறு வாய்ப்புகள் தேடி வரும். திருமண வாழ்க்கை இன்பமயமாக இருக்கும். 

துலாம் (Libra): இந்த ராசிக்காரர்களுக்கு இந்தாண்டு பெரிய பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி வாழ்விலும் புதிய கதவுகள் திறக்கும். தற்போது படித்து முடித்தவர்களுக்கு அவர்களின் கல்வியின் மூலம் சிறப்பான வேலை கிடைக்கும். புத்தாண்டில் வணிக திட்டங்கள் அனைத்தும் வெற்றிபெறும். 

ரிஷபம் (Taurus): இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்திலும் முன்னேற்றம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாகும். புத்தாண்டில் தொழிலிலும் செழிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழிலோ அல்லது புதிய வேலையிலோ இணையும் வாய்ப்புகள் உண்டாகும். 

 

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link