மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு... CGHS கட்டணத்தில் மாற்றம்!
மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை பலனை பெற, மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் செலுத்த வேண்டிய திருத்தப்பட்ட கட்டணங்கள், 2024 பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
CGHS திட்டத்திற்கான கட்டணம் தவிர, இந்தத் திட்டம் தொடர்பான மற்ற விதிமுறைகள் மற்றும் நிபந்தனையில் மாற்றம் ஏதும் இல்லை. மாற்றப்பட்ட கட்டணங்கள் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.
மத்திய அரசின் CGHS திட்டத்தின் கீழ் மருத்துவ வசதிகளைப் பெற, ஓய்வூதியதாரகள் மற்றும் ஊழியர்கள், இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாக மத்திய அரசின் அறிவிக்கப்பட்ட நகரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் சுமார் 80 நகரங்களில் உள்ள CGHS மருத்துவமனைகளில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் சுகாதார திட்டமான சிஜிஹெச்எஸ் திட்டம் 1954 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள், OPD சிகிச்சை, IPD சிகிச்சை, சிகிச்சைக்கான மருந்துகள், சிகிச்சை காண பரிசோதனைகள் போன்றவற்றை பெறலாம்.