ரிசர்வ் வங்கியின் புதிய ATM விதி: பணம் எடுக்கும்போது இதில் கவனம் தேவை
ஏடிஎம்மில் (ATM) அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளீடு செய்த பிறகும், பணத்தை எடுக்க முடியாமல், கணக்கில் இருந்து மட்டும் மீதித்தொகை கழிக்கப்பட்டால், ஏடிஎம்மில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு அதற்கு காரணமாக இருக்கலாம்.
பல முறை ஏடிஎம் இயந்திரத்தில் பணம் சிக்கிக்கொள்கிறது. அதனால் இது வாடிக்கையாளருக்கு கிடைப்பதில்லை, ஆனால், வங்கிக்கணக்கில் இது கழிக்கபப்டுகின்றது. இந்தப் பணத்தைத் திரும்பத் தர, வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 5 நாட்கள் + பரிவர்த்தனை நாள் வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
விதிகளின்படி, அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பச் செலுத்த வேண்டும். இது நடக்கவில்லை என்றால், வங்கி ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளருக்கு ரூ.100 அபராதம் செலுத்தும்.
ஏடிஎம் -மில் பணம் எடுக்கும்போது, பணம் வராமல், கணக்கில் இருந்து மட்டும் பணம் கழிக்கப்பட்ட செய்தி வந்தால், பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி பணத்தை பெறலாம்.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, இது போன்ற ஒரு சிக்கல் உங்களுக்கு நேர்ந்தால், முதலில் நீங்கள் உங்கள் வங்கியின் அருகிலுள்ள கிளைக்குச் சென்று அதைப் பற்றி சொல்ல வேண்டும். நீங்கள் விரும்பினால், வாடிக்கையாளர் சேவையை அழைத்து (கஸ்டமர் கேர்) இது குறித்து வங்கிக்கும் தெரிவிக்கலாம்.
இதற்குப் பிறகு, உங்கள் புகார் பதிவு செய்யப்படும், அதன் பின்னர் வங்கி இந்த விஷயத்தை விசாரிக்கும். உங்கள் புகார் உண்மையாக இருந்தால், 5 முதல் 6 நாட்களுக்குள் உங்கள் கணக்கில் பணம் திரும்பக்கிடைக்கும்.
ஆனால் இதற்கிடையில், உங்கள் ஏடிஎம் சீட்டையும் உங்கள் மொபைலில் வந்த செய்தியையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஏடிஎம் பரிவர்த்தனைக்கான ஆதாரமாக இதைப் பயன்படுத்தலாம்.
விதிகளின்படி, அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பச் செலுத்த வேண்டும். இது நடக்கவில்லை என்றால், வங்கி ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளருக்கு ரூ.100 அபராதம் செலுத்தும்.