பகீர் தகவல்! மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்.!
முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. முட்டைகளில் புரத சத்து மிக அதிகமாக உள்ளது, இதனை மீண்டும் சூடுபடுத்தும் போது, விஷமாக மாறும். இது உங்கள் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
பழைய சாதத்தை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. சமைக்காத அரிசியில் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை உணவில் விஷத்தன்மையை கலக்கும் இயல்புடையவை. மீண்டும் சுடவைக்கப்பட்டால் இந்த பாக்டீரியாக்கள்அவை பன்மடங்காகப் பெருகின்றன.
பழைய கீரையை ஒரு போதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது ஏனெனில் அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து, அதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
உருளைக்கிழங்கு மிகவும் அதிகம் விரும்பி சாப்பிடும் காய்கறி எனலாம். அத்தகைய சூழ்நிலையில், உருளைக்கிழங்கு சேர்த்த பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டு சூடாக்குவதன் மூலம், அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடுவதோடு, இது செரிமான அமைப்பையும் பாதிக்கிறது.
பழைய சிக்கன் உணவை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதிக புரதச்சத்து இருப்பதால், சிக்கனை மீண்டும் சூடாக்குவது பல செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும்.