Aging Population: சீனியர் சிட்டிசன்களுக்கு இவையெல்லாம் காலத்தின் கட்டாயம்! நிதி ஆயோக் பரிந்துரை!

Tue, 20 Feb 2024-8:39 am,

தற்போது இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக இருக்கும் நிலையில், இன்னும் 25 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, 19.5% சதவிகிதம் என்ற நிலையை எட்டும்.  அதிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும், வயதான பெண்களுக்கு மேலும் சலுகை வழங்குவது அவர்களின் நிதி நலனுக்கு பங்களிக்கும் என்று நிதி ஆயோக் கூறுகிறது  

உலக அளவில் மக்கள்தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் முதியோர்களின் எண்ணிக்கை மற்றும் விகிதாச்சாரமும் வேகமகா வளர்கிறது. இதற்கு குழந்தை பிறப்பு விகிதம் குறைவதும், மனிதர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதும் காரணமாக இருக்கிறது

மூத்த குடிமக்களுக்கு சேவைகளை எளிதாக அணுகுவதற்காக, மூத்த குடிமக்களுக்கான தேசிய போர்டல் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு குறைவாக இருக்கும் இந்தியாவில் பெரும்பாலான முதியவர்கள் தங்களுடைய சேமிப்பில் இருந்து கிடைக்கும் வருமானத்தையே சார்ந்துள்ளனர் என்பதும், மாறுபடும் வட்டி விகிதங்கள் அவர்களின் வருவாயைக் குறைக்கிறது

வரி மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் உட்பட முதியோர்களை பரமாரிப்பதற்கான துறைகளிலும் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம் என்றும், நிதிச்சுமை இருந்து வயதானவர்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது

மருத்துவம் மற்றும் சமூக பாதுகாப்பைத் தவிர, முதியோர் பராமரிப்பு தொடர்பான சிறப்பு பரிமாணங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது, இது காலத்தின் கட்டாயம் ஆக மாறிவிட்டது

மூத்த குடிமக்களுக்கான பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், தற்போதைய தலைகீழ் அடமான விதிகளில் (reverse mortgage mechanism) தேவையான திருத்தங்களைச் செய்வது மற்றும் அதை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் நிதி ஆயோக் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.

வயதானவர்களின் சேமிப்புக்கான வட்டிகளில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் பாதுகாப்பதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். ஏனெனில், வயதானவர்களின் தேவை அதிகமாகும் அதே நேரத்தில் அவர்களின் நிதி வரத்தில் ஏற்றத்தாழ்வு அவர்களின் வாழ்வை பாதிக்கும்

மாறி வரும் இன்றைய காலகட்டத்தில்,  மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு தொடர்பான முன்னுதாரணத்தை உருவாக்குவது தொடர்பாக ஆழமாக சிந்திக்க வேண்டிய கட்டத்தில் இந்தியா இருக்கிறது  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link