குவால்கம் நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஜியோ... ரூ. 8,200 விலையில் 5G ஸ்மார்ட்போன்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு: இந்தியாவில், ஸ்மார்ட்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் அல்லது செல்போன் இல்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று அளவிற்கு, செல்போன் பயன்பாடு அதிகரித்து, அத்தியாவசிய பொருளின் இடத்தை பிடித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ: நடுத்தர எளிய மக்களும் பலன் பெறும் வகையில், மலிவான விலையில், தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ, தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
மலிவான ஸ்மார்ட்போன்கள்: 5 ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், சீனாவிற்கு பதற்றம் அளிக்கும் வகையில், மலிவான ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. ரூ.9000-திற்கு குறைவான விலையில் இந்த போன் இருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ - குவால்கம் கூட்டாண்மை: குவால்கம் நிறுவனம் இந்தியாவில் மலிவான 5ஜி சிப் செட்டை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்த உடன் இணைந்து, 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் சுமார் ரூ. 8,200 விலையுள்ள ஸ்மார்ட் போன் தயாரிக்க திட்டமிடுகிறது.
மக்கள் மத்தியில் 5ஜி பயன்பாட்டை அதிகரித்தல்: இந்தியாவில் உள்ள, 2ஜி பயன்படுத்தும் கோடிக்கணக்கான மக்களை 5ஜி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்துவதே இந்த நோக்கமாகும் என்று, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் குவால்கம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாமானிய மக்களுக்கு 5ஜி இணை வசதி: இந்தியா முழுவதும் சாமானிய மக்களுக்கு 5ஜி இணை வசதி கிடைக்க, குவால்கள் மற்றும் ஜியோ இடையிலான கூட்டான்மை உதவும் என்று ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மலிவான 5G சிப்செட்: குவால்கம் (Qualcomm) தனது மலிவான 5G சிப்செட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டில் ஸ்மார்ட்போன் அணுகலில் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.Snapdragon 4s Gen 2 சிப்செட் இந்திய நுகர்வோர் மத்தியில் 5Gயை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான முயற்சி என கூறப்படுகிறது.
ரீசார்ஜ் கட்டண உயர்வு: ரிலையன்ஸ் யூ சென்ற மாதம் தொடக்கத்தில், மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் வோடபோன் ஆகிய பிற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் கட்டங்களை உயர்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் நிறுவனவத்திற்கு மாறிய பயனர்கள்: ஜியோ கட்டணம் உயர்வை அடுத்து, பல பயனர்கள் மலிவான திட்டனங்களை வழங்கும் பிஎஸ்என்எல் சிம்மிற்கு மாறினர். பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது 4ஜி தொழில்நுட்பம் மற்றும் நெட்வொர்க் கை விரிவுபடுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.