ஜியோவின் மலிவான போஸ்ட்பெய்ட் திட்டங்கள்... அதிக டேட்டாவுடன்... OTT பலன்கள்
ஜியோ ரூ.449 போஸ்ட் பெய்ட் திட்டம் : ரூ.449 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் குடும்பத்தினருக்கானது. இதில் அதிகபட்சம் 4 சிம்கள் கிடைக்கும். இதில் 75 ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பிற்கு பின்னர் முதன்மை பயனருக்கு கூடுதல் ஜிபிக்கான கட்டணம் இரு ஜிபிக்கு 10 ரூபாய்.
பிற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.150 என்ற அளவில் கட்டணம் இருக்கும் கூடுதல் ஜிபி பயன்படுத்துகையில் ஒரு ஜிபிக்கு 5 ரூபாய் வசூலிக்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் உண்டு. இந்தத் திட்டத்தில் JioTV, JioCinema (பிரீமியம் சந்தா அல்ல), JioCloud மற்றும் வரம்பற்ற 5G தரவுக்கான அணுகலும் அடங்கும்.
ஜியோ ரூ.749 போஸ்ட் பெய்ட் திட்டம் : ரூ.749 கட்டணத்தில் கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் குடும்பத்தினருக்கானது. இதில் அதிகபட்சம் 4 சிம்கள் கிடைக்கும். இதில் 100 ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பிற்கு பின்னர் முதன்மை பயனருக்கு கூடுதல் ஜிபிக்கான கட்டணம் இரு ஜிபிக்கு 10 ரூபாய்.
பிற உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.150 என்ற அளவில் கட்டணம் இருக்கும் கூடுதல் ஜிபி பயன்படுத்துகையில் ஒரு ஜிபிக்கு 5 ரூபாய் வசூலிக்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகைகளும் உண்டு. இந்தத் திட்டத்தில் JioTV, JioCinema (பிரீமியம் சந்தா அல்ல), JioCloud மற்றும் வரம்பற்ற 5G தரவுக்கான அணுகலும் அடங்கும்.
ரூ.749 போஸ்ட் பெய்ட் திட்டத்தில் Netflix (Basic) மற்றும் Amazon Prime Lite சந்தாக்கள், அத்துடன் JioTV, JioCinema (பிரீமியம் சந்தா அல்ல), JioCloud மற்றும் வரம்பற்ற 5G தரவுக்கான அணுகலும் அடங்கும்.
Jio வழங்கும் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் அதன் பயனர்கள் அனுபவிக்கக்கூடிய பல நன்மைகளில், முன்னுரிமை கால்பேக் சேவை, புதிய எண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பம், சர்வதேச ரோமிங் சேவை, வரம்பற்ற True 5G டேட்டா மற்றும் கேரி-ஃபார்வர்டு கிரெடிட் வரம்பு (எந்த எண்ணையும் ஜியோவுக்கு போர்ட் செய்தால்), தடையற்ற நெட்வொர்க் ஆகியவை அடங்கும்.
பிற ஆபரேட்டர்களின் தற்போதைய மொபைல் போஸ்ட்பெய்டு பயனர்கள் மற்றும் Axis Bank, HDFC வங்கி மற்றும் SBI கார்டின் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பாதுகாப்பு டெபாசிட் தேவையில்லை என்று ஜியோ கூறுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.1549 திட்டத்தைத் தவிர, அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் டேட்டா ரோல்ஓவர் பலனை வழங்காது என்பதை நினைவில் கொள்ளவும்.