ரூ.1, 5, 10, 20 நாணயங்கள்.. இவை செல்லுமா செல்லாதா? ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்
இதற்கிடையில் சில நாணயங்கள் தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளன. முன்னர் இருந்த பல நாணயங்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவற்றின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.
50 பைசா நாணயங்கள் தற்போது வழங்கப்படுவதில்லை, ஆனால் அவை இன்னும் புழக்கத்தில் உள்ளன. ஆகையால் அவற்றை வாங்கிக்கொள்ள யாரும் மறுக்க முடியாது.
நம்மில் பலர் 10 ரூபாய் நாணயத்தை வைத்துக்கொண்டு சில சமயம் சிக்கலில் சிக்கியிருக்கலாம். சில ஆட்டோக்காரர்களோ அல்லது கடைக்காரர்களோ 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதுண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த நாணயங்கள் செல்லாதா என்ற கேள்வி மனதில் எழுகிறது.
இவற்றை அரசாங்கம் தடை செய்துவிட்டதா? இந்த நாணயங்கள் போலியானவையா? இந்த நாணயங்களின் நிலை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்தியாவில் இது தொடர்பான சட்டம் ஏதேனும் இயற்றப்பட்டுள்ளதா? அதைப் பற்றிய முழுமையான தகவல்களைப் பார்ப்போம்.
இந்தியாவில் ரூ.10, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.20 நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்த நாணயங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கியால் (Reserve Bank Of India) வெளியிடப்படுகின்றன. இவை ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் வருகின்றன. ஆகையால் அனைத்து வகையான நாணயங்களும் முறையான நாணயங்கள்தான். அவற்றை யாரும் போலி என்று கூறி ஏற்றுக்கொள்ள மறுக்க முடியாது.
தற்போது வரை 25 பைசா அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள நாணயங்கள் (Currency) மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 50 பைசா நாணயங்கள் இப்போது வெளியிடப்படுவதில்லை. ஆனால் அவை இன்னும் புழக்கத்தில் உள்ளன. ஆகையால் அவற்றை பெற யாரும் மறுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி (RBI) கூறியுள்ளது.
கடைகள், வாகனங்கள் என யாரேனும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால், அவர் மீது புகார் அளிக்கலாம். அந்த புகாரின் பேரில் நாணயத்தை வாங்க மறுத்த நபருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். இந்திய நாணயச் சட்டம் மற்றும் ஐபிசியின் 489(A) முதல் 489(E) பிரிவுகளின் படி இதற்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்படலாம் என்று NCIB கூறுகிறது. உடனடி உதவிக்கு நீங்கள் காவல்துறையையும் அழைக்கலாம்.
ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பற்றிய ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) இந்திய அரசாங்கமும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.