Rio Raj: மனைவிக்காக ஸ்பெஷல் போட்டோக்களை பதிவிட்ட ரியோ! வைரலாகும் புகைப்படங்கள்..
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகனாக இருப்பவர், ரியோ ராஜ். இவர், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
ரியோ நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருந்த ‘ஜோ’ திரைப்படம் வெற்றி பெற்றது. இப்படம் நல்ல விமர்சனங்களுடன் மக்களின் பாராட்டை பெற்றது.
ரியோ, ஒரு பிரபல இசை தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்தார். அதன் பிறகு கணா காணும் காலங்கள் தொடரில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, அவருக்கு சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ரியோ, பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் முக்கிய பங்கேற்பாளராக இருந்தார். இவர், ஃபேமிலி எபிசோடில் தனது மனைவியை பார்த்து எமோஷனல் ஆன வீடியோ தற்போதும் இணைய வாசிகளிடையே வைரலாகி வருகிறது.
ரியோவும் அவரது மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரிதி என்ற மகள் இருக்கிறார்.
ரியோ, தனது 7வது வருட திருமண நாளையொட்டி, அதற்காக ஸ்பெஷலான ஒரு போஸ்டை பதிவிட்டிருக்கிறார். அதில், தனது மனைவியை எக்கச்சக்கமாக புகழ்ந்து பதிவிட்டிருக்கிறார்.
தனது மனைவி ஸ்ருதியா, ராணி என்றும், இன்னும் நிறைய ஆண்டுகள் இதே போல ஆனந்தமாக வாழ வேண்டும் என்றும் ரியோ தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.