10 வருஷத்துக்கு முன் எப்படி இருந்த பங்காளி நீ... ரோஹித் சர்மாவின் இந்த வெறியாட்டம் ஞாபகம் இருக்கா?
ரோஹித் ஷர்மா 264 ரன்கள் எடுத்து சாதனைப்படைத்து இன்றுடன் 10 வருடங்கள் நிறைவானதை ரசிகர்கள் மனதில் நிலை நிறுத்தியுள்ளார்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் “ கிரிக்கெட் ஹிட்மேன் ” என்பதை ரோஹித் ஷர்மா பதிவுசெய்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ரோஹித் ஷர்மாவை “ ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே ஹிட்மேன்” என்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு நாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் வரலாற்றில் ரோஹித் ஷர்மாவின் 173 பந்துகளில் 264 ரன்களை குவித்து உலக சாதனையை முறியடித்துள்ளதை கிரிக்கெட் வட்டாரங்கள் இணையத்தில் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
173 பந்துகளில் 33 நான்கு ரன்கள், 9 ஆறு ரன்கள் எடுத்து வரலாற்றுச் சாதனையைப் பெற்றதை பிசிசிஐ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரோஹித் ஷர்மாவின் சாதனையை நினைவுபடுத்தியுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் இது நம்பமுடியாத சாதனை மட்டுமல்லாமல், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த தனிநபர் வீரர் என்று சாதனை புத்தகத்தில் ரோஹித் ஷர்மாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார். வரலாறு காணாத சாதனையை முறியடித்த முதல் நபர் ரோஹித் ஷர்மா. உலகம் முழுவதும் பாராட்டு மழை குவிந்து வருகிறது.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் ஷர்மா 264 ரன்களை குவித்து உலக சாதனைப் படைத்தது இன்றும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் மறக்கமுடியாத ஒன்று.
2011 ஆம் ஆண்டில் நடந்த ஆஷ்டிரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் 219 ரன்கள் எடுத்து முதல் சாதனை படைத்தார். மீண்டும் 2014 ஆண்டு நவம்பர் 13 தேதியில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிகெட் போட்டில் ரோஹித் ஷர்மா 264 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.
பிப்ரவரி 24, 2010 அன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கார் ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ் சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச ஸ்கோராகும். சச்சின் டெண்டுல்கார் சாதனையை தற்போது ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார்.