டி20இல் இவர் தேவையே இல்லை... ருதுராஜ்க்கு ஏன் சான்ஸ் இல்லை - கொந்தளிக்கும் ரசிகர்கள்!

Fri, 19 Jul 2024-12:32 pm,

மூன்று டி20 மற்றும் மூன்று ஓடிஐ போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடிஐ போட்டிகளில் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். டி20இல் சூர்யகுமார் யாதவுக்கு (Suryakumar Yadav) கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

இந்த இரண்டு தொடர்களிலும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆல்-பார்மட் பிளேயராக பார்க்கப்படும் ருதுராஜ்க்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். 

 

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதில் சுப்மான் கில்லுக்கு (Shubman Gill) டி20இல் வாய்ப்பளிக்க காரணம் என்ன தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். சுப்மான் கில்லின் சர்வதேச டி20 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சராசரி ருதுராஜை விட மிக குறைவாக இருக்கும் நிலையில், ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதியானது என தெரிவிக்கின்றனர். 

 

ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 20 போட்டிகளில் விளையாடி 633 ரன்களை குவித்துள்ளார். இவரின் சராசரி 39.56 ஆகும், ஸ்ட்ரைக் ரேட் 143.5 ஆகும். இவர் இதுவரை 4 அரைசதங்கள், 1 சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 123 ரன்களை குவித்துள்ளார். பவுண்டரிகள் 65, சிக்ஸர்கள் 24 ஆகும். 

 

சுப்மான் கில் இதுவரை 19 போட்டிகளில் விளையாடி 505 ரன்களைதான் அடித்துள்ளார். சராசரி 29.7 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 139.5 ஆகும். இதுவரை 3 அரைசதங்கள் மற்றும் 1 சதம் அடித்துள்ளார். அதிகபட்சமாக 126 ரன்களை அடித்துள்ளார். பவுண்டரிகள் 51, சிக்ஸர்கள் 21 ஆகும்.

 

இதனை ஒப்பிட்டு பார்த்தாலே ருதுராஜ் கெய்க்வாட் சர்வதேச டி20இல் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவது தெரிகிறது. தொடர்ச்சியாக ஐபிஎல் சீசனிலும் சரி, சர்வதேச அளவிலும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டு வருவதையும் பார்க்க முடிகிறது. அதுவும் பேட்டிங் ஆர்டரில் எங்கு வேண்டுமானாலும் ருதுராஜ் விளையாடுவதும் இங்கு கவனிக்க வேண்டும்.

 

தற்போது சுப்மான் கில் டி20 மற்றும் ஓடிஐ போட்டிகளில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு இனி தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என்பதும் இதில் இருந்து தெரிகிறது. மேலும், ருதுராஜ் இதனால் டி20இல் மட்டுமின்றி ஒருநாள் தொடரிலும் வருங்காலங்களில் வாய்ப்பை பெறாமல் போகலாம் என கூறப்படுகிறது.  

 

ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக கடந்த ஐபிஎல் தொடரில் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் இந்திய அணி ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link