இரவில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு டிப்ஸ்! ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும்?
தனியாக இரவில் பயணம் செய்பவர்களுக்கான பாதுகாப்பு டிப்ஸ், கவனமா படிங்க.
உடைமைகள் பாதுகாப்பு:
உங்களது பாதுகாப்பு உடைமைகளான செல்போன், அணிகலன்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளவும். இவற்றை வெளியில் தெரியுமாறு எங்கும் வைக்க வேண்டாம்.
ரயிலில் இரவில் பயணம் செய்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக மேல் பர்த்தை ரிசர்வ் செய்யவும். அந்த வகையில், பல சமயங்களில் அசம்பாவிதம் நடப்பதை தவிர்க்கலாம்.
கடைசி நிமிடத்தில் டிக்கெட் கவுண்டரில் நின்று பயணச்சீட்டு பெறுவதை தவிர்க்கவும். முன் கூட்டியே உங்கள் பயணச்சீட்டுகளை ஆப்கள் மூலம் புக் செய்து கொள்ளவும்.
சுற்றுபுறம்:
உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை விழிப்புடன் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஏதேனும் சரியில்லாத விஷயம் உங்களை சுற்றி இருப்பதாக உணர்ந்தால் உடனே அங்கிருந்து நகர்ந்து விடவும்.
பிற பயணி:
நீங்கள் பயணிக்கும் பேருந்து அல்லது ரயிலில் உங்களை போலவே தனியாக பயணிக்கும் பெண் இருந்தால் அவர் அருகில் சென்று அமரவும். முடிந்தால், அவரிடம் பேசிக்கொண்டே செல்லவும். அப்போதுதான் ஒரு சிலர் நீங்கள் தனியாக இல்லை என்பது ஆபத்தை விளைவிக்க நினைக்கும் நபருக்கு தெரியும்.
பயணத்தின் போது உங்களை யாரேனும் பார்த்துக்கொண்டே இருந்தால், அல்லது உங்களிடம் நெருங்கி வந்தால் பயப்படாமல் சத்தம் போடுங்கள். இது போன்ற நபர்கள், பயத்துடன் இருப்பவர்களை எளிதில் அடக்கி விடலாம் என நினைப்பர். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
பாதுகாப்பு உபகரணங்கள்:
நீங்கள் தனியாக செல்லும் போது உங்களின் லொக்கேஷனை நம்பிக்கைகுரிய நபருக்கு அனுப்புங்கள். கையில் எப்போதும் பெப்பர் ஸ்ப்ரே, பாக்கெட் கத்தி ஆகியவற்றை வைத்திருங்கள். கைகளின் நகம் வைத்திருப்பதும் ஒரு பாதுகாப்பு உபகரணம்தான். ரயில்வே அல்லது காவல் துறையின் உதவி எண்களை எமர்ஜன்சி கால் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.