நீதிதேவன் சனீஸ்வரரை சாந்திப்படுத்தும் சனிக்கிழமை பரிகாரங்கள்! கைமேல் பலன் நிச்சயம்!

Fri, 29 Mar 2024-7:00 pm,

நமது கர்மங்களுக்கு அதாவது நாம் செய்யும் நல்லது கெட்டதுக்கு ஏற்றவாறு பலாபலன்களைக் கொடுக்கும் சனீஸ்வரர், கெடுதல்களுக்கு தண்டனைக் கொடுப்பதில் பாரபட்சம் பாராதவர் என பெயர் பெற்றவர்

மற்ற நவகிரகங்களுக்கும் சனீஸ்வரருக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், சனி பகவான், கடவுள்களையையே விட்டு வைக்காதவர் என்பதை சொல்லும் பல கதைகளும் உண்டு

சனீஸ்வரர் நீதி தவறாதவர் என்றாலும், கொடுக்கும் தண்டனையை குறைத்துக் கொடுக்க, சில பரிகாரங்கள் உண்டு. 

சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வாழ்வில் அனைத்துவிதமான தொல்லைகளும் விலகி, தடைகள் நீங்கும். சனிக்கிழமைகளில் ஒருவேளை உணவருந்தி, ஆலயம் சென்று நவகிரகங்களையும் சனீஸ்வரரையும் வணங்கி ஏழைகளுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தானம் செய்ய வேண்டும்

சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு சென்று சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் இட்டால் தொல்லைகள் குறையும் 

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுபவர்களின் மீது சனீஸ்வரருக்கு கருணை ஏற்படும். எனவே, நடக்க முடியாதவர்களுக்கும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவதை கடமையாக நினைத்து செய்யுங்கள்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link