சனி பெயர்ச்சி.. மகா ராஜ அதிர்ஷ்டம் பொற்காலம் இந்த ராசிகளுக்கு
அக்டோபர் மாதத்தில், சனி தனது நட்சத்திரத்தை மாற்றி, சதயம் நட்சத்திரத்தில் நுழையும். இது மூலம் சில ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறலாம். சனிபகவான் சதயம் நட்சத்திரத்தில் நுழைவதால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு சனி சதயம் நட்சத்திரத்தில் நுழைந்து அடுத்து டிசம்பர் 27 வரை இந்த நட்சத்திரத்தில் இருப்பார். அதன் பிறகு மீண்டும் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு மாறுவார். அத்தகைய சூழ்நிலையில், சனி பல மடங்கு சக்தி வாய்ந்ததாக மாறும்.
சனியின் நட்சத்திர ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். செல்வம் பெருகும். வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கடன் தொல்லை நீங்கும். வேலையில் திருப்தி அடையலாம். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர ராசி மாற்றம் நன்மை பயக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். கல்வித்துறையில் மகத்தான வெற்றியை பெறுவீர்கள். தைரியமும் வீரமும் வேகமாக அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
சனியின் நட்சத்திர மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவு பெறும். தொழிலில் பலன்கள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் வெற்றி பெறலாம். வாழ்க்கையில் சாதகமான தாக்கம் ஏற்படும். உடல்நிலை நன்றாக இருக்கும், மன உளைச்சல் குறையும். வியாபாரத்திலும் அதிக லாபம் பெறுவீர்கள்.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.