மேஷத்தில் இருக்கும் செவ்வாயை மோசமாய் பாதிக்கும் சனீஸ்வரரின் வக்ர பார்வை! கவனம் எச்சரிக்கை...
செவ்வாய் தற்போது அதன் சொந்த ராசியான மேஷத்தில் உள்ளது. ஜூலை 12, வரை மேஷத்தில் இருக்கும் செவ்வாய், சனியின் பார்வையில் விழுகிறது. செவ்வாய் கிரகத்தில் சனியின் அம்சம் என்பது மிகவும் ஆபத்தானது, இது 5 ராசிகளுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும்
நவகிரகங்களில் நீதிதேவன் என்று அறியப்படும் சனீஸ்வரரின் பார்வை பட்டாலே வாழ்க்கையில் பிரச்சனைகள் ஆரம்பித்துவிடும். அதிலும், செவ்வாய் இருக்கும் வீட்டில் சனியின் பார்வை பட்டால் துன்பங்கள் அதிகரிக்கும்
சனியின் பார்வை படும் இடத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் தனது சொந்த வீட்டில் இருந்தாலும், சனியின் பார்வையினால் சில ராசிக்கார்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவார்கள்
சனியின் பார்வையால், மகரம் ராசிக்காரர்களுக்கூ வேலையில் அழுத்தம் அதிகரிக்கும். பணிகளை பட்டியலிட்டு ஒவ்வொன்றாக முடிக்கவும். செலவுகள் அதிகரிப்பதால் பணப் பற்றாக்குறை ஏற்படலாம். உறவுகள் மோசமடையும் காலமாக இருப்பதால் வாழ்க்கைத் துணையை நன்றாக நடத்துங்கள். சிறிய விஷயங்கள் கூட பெரிதாகலாம் என்பதால், முடிந்த அளவு அமைதியாக இருப்பது நல்லது
விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமான காலம் என்றே சொல்லலாம். பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்துக் கொண்டு, அதனை முழு தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். தொழிலில் ஏமாற்றம் தரும் செய்திகள் கிடைக்கலாம்.வீண் வாதங்களையும், தேவையில்லாத சச்சரவுகளைத் தவிர்த்தால் நிம்மதியாக இருக்கலாம்
பொறுமையாக இருக்க வேண்டிய காலம் இது. துலாம் ராசிக்காரர்களுக்கு சொத்து சம்பந்தமான விஷயங்கள் சிக்கல்களைக் கொடுக்கும் என்பதால் கவனமாக இருக்கவும். திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், அதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும். பணம் வருவதில் தாமதம் ஏற்படும்
கடினமாக உழைத்தாலும், பலன் குறைவாகவே இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு பொறுமை அதிகமாக இருக்க வேண்டிய காலம் இது. கால நேரம் மாறும் வரை காத்திருங்கள். தேவையற்ற செலவுகள் ஏற்பட்டாலும் அமைதியாக இருப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது