OIL CUT: சவுதி அரேபியாவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை உயர்வு! இதன் எதிரொலி என்ன?

Mon, 05 Jun 2023-9:27 am,

சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மான்

 

நாளொன்றுக்கு 1 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக சவுதி அரேபியா தானாக முன்வந்து அறிவித்துள்ளது  

உலகின் முன்னணி கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, நாளொன்றுக்கு மேலும் 1 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தியைக் குறைப்பதாக உறுதியளித்ததை அடுத்து, எண்ணெய் விலை பீப்பாய்க்கு $1க்கு மேல் உயர்ந்தது. 

சவுதி அரேபியாவின் எண்ணெய்  அமைச்சகத்தின் அறிக்கையின்படி, OPEC+ உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எட்டப்பட்டது

OPEC எண்ணெய் விலையை கையாள்வதாகவும், அதிக எரிசக்தி செலவுகள் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள், பொருளாதாரத் தடைகளை விதித்தாலும், ரஷ்யாவுடன் OPEC இன் இணக்கம் குறித்து கவலைகள் உள்ளன.

கடந்த தசாப்தத்தில் மேற்கத்திய நாடுகளின் அதிகப்படியான பணத்தை அச்சிடுவது பணவீக்கத்தைத் தூண்டியது என்றும், எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் முக்கிய ஏற்றுமதியின் மதிப்பைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க நிர்பந்தம் இருப்பதாகவும் OPEC அதிகாரிகள் கூறுகின்றனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link