SBI Alert: ஜூலை 1 முதல் பணம் எடுக்க அதிக செலவாகும், மாறுகின்றன விதிகள்

Sun, 20 Jun 2021-10:00 am,

SBI BSBD கணக்கு பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்காகும் (Zero Balance Saving Account). இத்தகைய கணக்குகள் ஏழைக் குடும்பங்களுக்கானவை. வழக்கமான சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு அளிக்கப்படுவது போலவே வங்கி, பூஜ்ஜிய இருப்பு கணக்குகளுக்கும் அதே அளவிலான வட்டியை அளிக்கின்றது. 

SBI BSBD கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நிதியாண்டில் 10 காசோலைகள் கிடைக்கின்றன. இப்போது 10 காசோலைகள் கொண்ட காசோலை புத்தகத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். 10 காசோலைகளுக்கு வங்கி ரூ .40 மற்றும் ஜி.எஸ்.டி-ஐ வசூலிக்கும். 25 காசோலைகளுக்கு ரூ .75 மற்றும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும். அவசர காசோலை புத்தகத்தின் 10 காசோலைகளுக்கு ரூ .50 மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், மூத்த குடிமக்களுக்கு காசோலை புத்தகங்களில் புதிய சேவை கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

SBI BSBD கணக்கு உள்ளவர்களுக்கு 4 முறை இலவசமாக பணம் எடுப்பதற்கான வசதி கிடைக்கிறது. வங்கிக் கிளைகளுக்கு அருகில் உள்ள ஏடிஎம்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளும் இதில் அடங்கும். இலவச வரம்பு முடிந்துவிட்டால், வங்கி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. வங்கிக் கிளை அல்லது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க வங்கி ரூ .15 மற்றும் ஜிஎஸ்டி-ஐ வசூலிக்கிறது.

 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பணத்தை எடுக்கும் வரம்பை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து, மற்ற வங்கிக் கிளைகளிலிருந்து, வித்ட்ராயல் படிவம் மூலம் ரூ .25,000 வரை பணம் எடுக்கலாம். மற்ற கிளைகளிலிருந்து காசோலை மூலம் இப்போது ரூ .1 லட்சம் வரை எடுக்க முடியும். மூன்றாம் தரப்பு (யாருக்கு காசோலை வழங்கப்படுகிறதோ) பணம் எடுக்கும் வரம்பு ரூ .50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link