மகர ராசியில் சனி வக்ர பெயர்ச்சி; எந்த ராசிக்கு பலன் அதிகம்

Mon, 11 Jul 2022-4:05 pm,

மிதுனம்: மிதுன ராசியினருக்கு சனியின் சஞ்சாரம் பிரச்சனைகளை உண்டாக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கோபத்தை தவிர்த்து புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். 

 

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி மாற்றம் நிவாரணம் தரும். சனி தசை நீக்கும். எதிரிகளிடம் ஜாக்கிரதை.

சிம்மம்: சிம்ம ராசியினருக்கு சனிப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். தொழில் சம்பந்தமான பயணங்கள் இருக்கும். இரகசிய எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி: மகர ராசியில் சனியின் பிரவேசம் கன்னி ராசியினருக்கு சவாலான காலங்களை கொண்டு வரும். கடின உழைப்பால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் வெற்றியைத் தருவார். செயலிலும் வெற்றி பெறுவீர்கள். ஆனால் மன அழுத்தம் இருக்கலாம்.

விருச்சிகம்: விருச்சிக ராசியினருக்கு சனிப்பெயர்ச்சி தொழில், வியாபாரத்தில் நன்மைகளைத் தரும். புதிய வேலை, இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் நிதிச் சிக்கலைத் தரும். ஆனால் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மகரம்: சனியின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் தரும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். அரசு வேலை கிடைக்கலாம். மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

மேஷம்: சனிப் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைத் தரும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். பணியிடத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். 

ரிஷபம்: உத்யோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். வருமானம் அதிகரிக்கும். 

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் நல்ல பலன்களைத் தரும். சனியின் அருள் இந்த ராசியில் இருக்கும். பணமும் மரியாதையும் பெறுவீர்கள்.

மீனம் : சனிப்பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் லாபம் தரும். நின்று போன காரியங்கள் மீண்டும் வேகமெடுக்கும்.

 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link