ஜிவி பிரகாஷ் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஒரு வருடத்தில் இத்தனை விவாகரத்தா! லிஸ்ட் இதோ..
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி திருமணமான 10 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார்.
பிரபுதேவா மற்றும் நடிகை நயன்தாராவுக்கும் இடையேயான உறவு குறித்த பலவிதப் பேச்சுக்கள் பிறகு ஒருமனதான முடிவில் பிரிந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் திருமணமான 18 ஆண்டுகளுக்குப் பிறகு சில மனக்கசப்புக் காரணத்தினால் இவர்கள் இந்த முடிவு எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அமலா பால் மற்றும் ஏ.இல்.விஜய் திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா திருமணமான நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 2021 இல் இந்த ஜோடி பிரிந்ததாக அறிவித்தது.
ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ரவி இருவரும் செப்டம்பர் 2024 இல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். சொத்து தகராறுகள், சமூக ஊடகக் கட்டுப்பாடு மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக இந்த விவாகரத்து பரபரப்பாக மாறியது.
ரஹ்மான் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தும் விதமாகத் தனது எக்ஸ் தள பக்கத்தில், "எங்களது திருமண வாழ்க்கையில் முப்பது வருடங்களை நிறைவு செய்வோம் என்று நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால் எதிர்பாராத ஒரு முடிவு வந்துவிட்டது. உடைந்த இதயங்களின் கனத்தைக் கண்டால் கடவுளின் சிம்மாசனமும் நடுங்கிவிடும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லையென்றாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த அத்தியாயத்தைக் கடந்து செல்ல எங்கள் தனியுரிமைக்கு மரியாதை கொடுக்கும் நண்பர்களின் அன்புக்கு நன்றி" என்று மன வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.
ஏ ஆர் ரகுமான் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் விவகாரம் சூழல் இப்படி இருக்க அதில், "திருமணமாகிப் பல வருடங்கள் கழித்து நான் ரஹ்மானைப் பிரிந்து செல்வது கடினமான முடிவுதான். இத்தனை வருடங்கள் வாழ்க்கையை நகர்த்திய பிறகு சமீபகாலமாக எங்களுக்குள் வலியும் கவலையும் அதிகமாகின. பதற்றங்கள் உருவாகி ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியிருக்கின்றன. அந்த இடைவெளியை நிரப்ப எங்களால் நிரப்ப முடியவில்லை. மிகக் கடுமையான மன வலியில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்" என்று இவ்வாறுக் குறிப்பிட்டுள்ளார்.