பகீர் தகவல்! ஒரு நபர் தினமும் 320 பிளாஸ்டிக் துண்டுகளை உட்கொள்கிறார்..!!

Sun, 16 Jan 2022-8:04 pm,

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள், மனித உணவுச் சங்கிலியில் மைக்ரோபிளாஸ்டிக் எவ்வாறு நுழைகிறது என்பதைக் காட்டுகிறது. கடந்த ஆண்டு பல பிரபலமான பிராண்டுகளின் சீல் செய்யப்பட்ட பாட்டில்களில் விற்கப்பட்ட தண்ணீரில் பிளாஸ்டிக் துணுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. சமீபத்தில்,கனடா விஞ்ஞானிகள் ஆராய்ச்சியின் போது மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதைப் பற்றிய நூற்றுக்கணக்கான தரவுகளை பகுப்பாய்வு செய்தனர், பின்னர் அவற்றை அமெரிக்கர்களின் உணவுப் பழக்கத்துடன் ஒப்பிட்டனர்.

ஆய்வின் அடிப்படையில், ஒரு வயது வந்த மனிதன் ஒரு வருடத்தில் சுமார் 52,000 மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக கண்டுபிடித்துள்ளனர். உதாரணமாக, நாம் வாழும் மாசுபட்ட காற்றில், 1.21 லட்சம் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் சுவாசத்தின் மூலம் மட்டுமே உடலுக்குள் நுழையும். அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் 320 பிளாஸ்டிக் துண்டுகள். இது தவிர, ஒருவர் பாட்டில் தண்ணீரை  குடிக்கும் பழக்கம், ஒரு வருடத்தில், சுமார் 90,000 பிளாஸ்டிக் துண்டுகள் அவரது உடலுக்குள் செல்லக்கூடும். இந்த ஆய்வு குறித்த அறிக்கை சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர, news.trust.org கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி, கிரெடிட் கார்டுக்கு சமமான பிளாஸ்டிக்கை 10 நாட்களில் உட்கொள்கிறோம். ஒரு கப் பாலுடன் சாலட்டை உட்கொள்ளும் ஒருவர் 10 நாட்களில் சுமார் 7 கிராம் பிளாஸ்டிக்கை உண்ணலாம். காற்று, தண்ணீர், உணவு ஆகியவற்றுடன் பிளாஸ்டிக் பொருட்களும் உடலை சென்றடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளும் அளவை கணக்கிட்டால், 15 முதல் 20 கிலோவை எட்டுவது பெரிய விஷயமாக இருக்காது.

ஒருவரின் உடலுக்குள் எத்தனை பிளாஸ்டிக் துகள்கள் செல்லும் என்பது அவர் எங்கு வாழ்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்தே அமையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித உடலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் தாக்கம் என்ன, அது இன்னும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். இருப்பினும்,130 மைக்ரோமீட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் துகள்கள் மனித திசுக்களுக்கு மாற்றும் திறனைக் கொண்டுள்ளன, பின்னர் உடலின் அந்த பகுதியின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கின்றன.

மற்றொரு ஆய்வின்படி, ஒரு வருடத்தில், தீயணைப்பு படை வீரர்களின் ஹெல்மெட்டுக்கு சமமான பிளாஸ்டிக்கை நாம் உட்கொள்கிறோம். அதே நேரத்தில், 10 ஆண்டுகளில், நாம் சுமார் 2.5 கிலோ பிளாஸ்டிக்கை சாப்பிடுகிறோம். ஆயுட் காலத்தில், ஒரு நபர் 20 கிலோ பிளாஸ்டிக் வரை உட்கொள்ளலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link