கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல... உலகக் கோப்பையில் சுப்மன் கில் போல் அவதிப்படும் 6 வீரர்கள்!

Tue, 10 Oct 2023-5:31 pm,

உலகக் கோப்பை தொடர் கடந்த அக். 5ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் ஒரு போட்டியை விளையாடிவிட்ட நிலையில், இந்த தொடரில் காயத்தால் அவதிப்படும் வீரர்களை காணலாம். 

 

Shubman Gill: சுப்மான் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியை தவறவிட்ட அவர் அடுத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியையும் தவறவிடுவார் என தெரிகிறது. 

 

Kane Williamson: உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேன் வில்லியம்சன் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இப்போதுதான் மீண்டார். இருப்பினும், முதல் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என முன்னரே தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், அவர் உலகக் கோப்பையின் முதல் இரண்டு லீக் போட்டிகளில் விளையாடவில்லை. பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று அரைசதம் அடித்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது. 

 

Ben Stokes: இங்கிலாந்து ஆல்-ரவுணட்ரான பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் அரங்கில் தனது ஓய்வை அறிவித்த பின்னரும், உலகக் கோப்பை அணிக்காக மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். எனினும், இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இவர் இங்கிலாந்து அணியின் முதல் இரண்டு போட்டியிலும் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை. 

Marcus Stoinis:ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டாரன மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இவர் இந்திய அணிக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் போட்டியில் விளையாடவில்லை. 

 

Tim Southee: நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி தனது விரலில் ஏற்பட்ட முறிவு காரணமாக உலகக் கோப்பை தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்னரே அறுவை சிகிச்சை மேற்கொண்டார். நியூசிலாந்தின் உலகக் கோப்பை ஸ்குவாடில் உள்ள இவர் தற்போது குணமாகி வருகிறார். இருப்பினும், நியூசிலாந்தின் தொடக்க கட்ட போட்டிகளில் இவர் பங்கேற்க வாய்ப்பில்லை என தெரிகிறது. 

 

Logan Van Beek: உலகக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து வேகப்பந்து வீச்சாளர் லோகன் வான் பீக்கின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், நேற்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியை அவர் தவறவிட்டார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link