சிவகார்த்திகேயன் மகளா இது? இணையத்தை தூள்களப்பும் ஆராதனா !

Wed, 23 Oct 2024-6:35 pm,

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா போட்டோஸ் இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது. ஆரதானா  ‘கனா’ படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடல் பாடி பிரபலமான சிறு குழந்தை பாடகியாக சினிமாவில்  இடம் பிடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் முதன்முதலில் சினிமாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் காமெடிப் பலவற்றை செய்து காமெடி ஹீரோவாகவும் சினிமாவில் வளம் வந்தார்.

சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்திருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் காமெடி வெகுவாக மக்களை சென்றடைந்தது.

ஹன்சிகா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நடித்த மான் கராத்தே ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக சிவகாத்திகேயனுக்கு அமைந்தது.

வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இருவரின் காமெடி படம் இது. இப்படம் முழுவதும் காமெடியாகவே  இருக்கும்.

கனா படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் மற்றும் சத்தியராஜ் இணைந்து நடித்த ‘ கனா’ பெண் திறமையை மையப்படுத்தியும், பெண் அனைத்துதிலும் சாதிக்க முடியும் என்றக் கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய ‘ வாயாடி பெத்த புள்ள’ பாடல் இணையத்தில் அதிக மில்லியன் பார்வையாளரகளை கவர்ந்த பாடலாக உருவெடுத்தது.இதன்மூலம் சிவகார்த்திகேயன் மகள்  அனைவராலும் அறியப்பட்டார்.

 சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.மேலும் தற்போது சிவகார்த்திகேயன் மகள் அம்மாவுடன் இருக்கும் போட்டோஸ் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link