தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்!

Wed, 27 Dec 2023-1:45 pm,

அயலான் படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.  இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேற்று அயலான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  இதில் சிவகார்த்திகேயன், ஏஆர் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் மீது டி இமான் குற்றம் சாட்டி இருந்தார்.  இதனால் சிவகார்த்திகேயன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இந்நிலையில், அயலான் நிகழ்ச்சில், "என்னை சில பேர் சூப்பர் என சொல்வார்கள். சிலர் பேர் திட்டுவாங்க. நான் இதை எல்லாம் எடுத்துக்கொள்வதில்லை. என்னுடைய hatersகளை நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. புடிச்சவங்களுக்காக நான் எப்போதும் போல என் பாதையில் ஓடிக்கொண்டிருக்க போகிறேன்" என கூறி உள்ளார்.

மேலும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தனுஷின் கேப்டன் மில்லர், லால் சலாம் போன்ற படங்கள் வெற்றி பெற வேண்டி வாழ்த்தி உள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link