எந்த ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்டாய் புகைப்படங்கள் எடுக்கும்? உலக புகைப்படதினம் 2024!

Mon, 19 Aug 2024-2:03 pm,

அனைவருக்கு பிடித்த புகைப்படங்களை நாமே அழகாக எடுக்கலாம். புகைப்படங்கள் எடுப்பது பொழுதுபோக்காக இருந்தாலும், இதன் முக்கியத்துவம் மிகவும் பெரியது, காலத்தை கடந்து நிற்பது. புகைப்படக் கலைஞராக மாறுவதற்காக மட்டுமல்ல, சிறந்த புகைப்படங்களை எடுக்கவும் உதவும் சிறந்த ஸ்மார்ட்போன்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்

Oppo Find X7 Ultra ஸ்மார்ட்போனில், 50MP ப்ரைமரி ஷூட்டர், இரண்டு 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 50MP அல்ட்ரா வைட் ஆங்கிள் ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்ட குவாட் ரியர் ஹாசல்பிளாட் கேமரா அமைப்பு இருப்பதால், போட்டோ எடுக்க மிகவும் சிறந்தது

ஹானர் மேஜிக்6 ப்ரோ போன்,180MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார், 50MP அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 50MP வைட் ஆங்கிள் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை வழங்குகிறது. DSLR இன் தரத்தைப் போன்ற தரமான புகைப்படங்களை இந்த ஸ்மார்ட்போனில் எடுக்கலாம்

OIS உடன் 50MP முதன்மை சென்சார், 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார், 50MP டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 50MP அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் உள்ளிட்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு கொண்டது Xiaomi 14 அல்ட்ரா. உங்கள் புகைப்படத் திறன்களை மேம்படுத்த Xiaomi 14 Ultra உதவியாக இருக்கும்

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், டிஎஸ்எல்ஆர் அளவிலான கேமரா அனுபவத்தை வழங்குகிறது.   டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரும் இந்த ஐபோன் எடுக்கும் புகைப்படங்கள் நல்ல தரம் வாய்ந்தவையாக இருக்கும்

சாம்சங் Galaxy S24 Ultra, OIS உடன் 200MP பிரைமரி ஷூட்டர் உட்பட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. மற்ற சென்சார்களில் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர், 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் ஷூட்டர் மற்றும் 10MP டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவை அடங்கும்.

சிறப்பான கேமரா திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் ​​ஒன்பிளஸ் நிறுவனத்தில் ஒன்பிளஸ் 12, 50MP முதன்மை சென்சார், 64MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் 48MP அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Hasselblad வண்ண அளவுத்திருத்தம், HDR மற்றும் பிற அம்சங்கள் என இந்த போன் கலக்கலாக இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள தகவலின் உண்மைத்தன்மைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link