சந்திரயான் 3 லேண்டிங் வெற்றியின் எதிரொலி, இந்தியப் பங்குச் சந்தையில் ராக்கெட் வேகத்தில்...

Thu, 24 Aug 2023-11:02 am,

சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் துல்லியமாய் தரையிறங்கிய வரலாற்று தருணத்தை உலகமே கண்டு மகிழ்கிறது

விண்கலம் சந்திரனைத் தொட்டால், விண்வெளி நிறுவனத்தின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்தனர். தற்பொது, இந்த திட்டத்திற்கு உதவியாக இருந்த விண்வெளி நிறுவனங்களின் தற்போதைய பங்கு மதிப்பைத் தெரிந்துக் கொள்வோம்

சிவில் கட்டுமான நிறுவனமான எல்&டி, சந்திரயான் 3க்கான முக்கியமான பூஸ்டர் பிரிவுகளான ஹெட் எண்ட் செக்மென்ட், மிடில் செக்மென்ட் மற்றும் நோசில் பக்கெட் ஃபிளேன்ஜ் ஆகியவற்றை தயாரித்தது. எல்&டி பங்குகள் பிஎஸ்இயில் 0.98 சதவீதம் உயர்ந்து ஒவ்வொன்றும் ரூ.2,706 ஆக இருந்தது. புதன்கிழமை வர்த்தகத்தில் பங்குகளின் விலை 52 வாரங்களில் அதிகபட்சமாக 2,725.75 ஆக இருந்தது.

பிஹெச்இஎல் நிறுவனம் லேண்டர் மாட்யூல் மற்றும் ப்ராபல்ஷன் மாட்யூலுக்கு பேட்டரிகளை தயாரித்தது. ஆரம்ப வர்த்தகத்தில் பங்குகள் 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 113.35 ஆகத் தொட்டு லாபம் ஈட்டியது.

MTAR டெக்னாலஜிஸ்: சந்திரயான் 3 ஏவுகணைக்கான இயந்திரங்கள் மற்றும் பூஸ்டர் பம்புகளை நிறுவனம் இஸ்ரோவுக்கு வழங்கியது. சந்திரயான் நிலவைத் தொட்ட நாளில், எம்டிஏஆர் டெக்னாலஜிஸ் பங்குகள் பிஎஸ்இயில் 3.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,195.1க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த பங்கு பிஎஸ்இ-யில் ஒரு நாள் அதிகபட்சமாக ரூ.2,208.95ஐ எட்டியது.

Mishra Dhatu Nigam Ltd: நிறுவனம் ஏவுகணைக்கான முக்கியமான பொருட்களை வழங்கியது. சந்திரயான் நிலவை வெற்றிகரமாக முத்தமிட்டபோது, மிஸ்ரா தாது நிகாம் லிமிடெட் பங்குகள் பிஎஸ்இயில் 3.15 சதவீதம் உயர்ந்தது. புதன்கிழமை வர்த்தகத்தில் பங்குகள் 52 வாரங்களில் அதிகபட்சமாக 414.7 ஐ எட்டியது.

சென்டம் எலக்ட்ரானிக்ஸ், சந்திரயான்-3 இல் விண்வெளி பயன்பாடுகளுக்கான மின்னணு அமைப்புகளை வடிவமைத்து தயாரித்தது. புதனன்று, சென்டம் எலக்ட்ரானிக்ஸ் பங்குகள் பிஎஸ்இயில் 8.43 சதவீதம் உயர்ந்து ரூ.1,553க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.

எச்ஏஎல், பாராஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் மற்றும் வால்சந்த்நகர் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை சந்திரயான்-3 கட்டுமானத்தில் பங்களித்துள்ளன. 

கோத்ரேஜ் குழும நிறுவனமான கோத்ரேஜ் ஏரோஸ்பேஸ், சந்திரயான்-3க்கு பல முக்கிய கூறுகளை வழங்கியுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link