Weird Taxes: வரி தொடர்பான விசித்திரமான உண்மைகள்: தாடி வச்சா வரி கட்டனும்
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்தியாவின் திருவிதாங்கூர் (கேரளா) சமஸ்தானத்தில் பெண்களுக்கு 'மார்பக வரி' விதிக்கப்பட்டது. மார்பக அளவுக்கேற்ப அதிகாரிகள் வரி நிர்ணயம் செய்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நங்கேலி என்ற பெண் தனது மார்பகங்களை வெட்டி வீசினார். எதிர்ப்பு கிளம்பியது. 1814 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் ராஜா மார்பக வரியை ஒழித்தார்.
18 ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் மீசை மற்றும் தாடி வைத்திருப்பவர்கள் 'தாடி வரி' செலுத்த வேண்டியிருந்தது. வரி செலுத்தவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. ரஷ்யாவின் ஆட்சியாளர் பீட்டர் தி கிரேட், ரஷ்யாவின் சமூகம் ஐரோப்பாவின் சமுதாயத்தைப் போலவே நவீனமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இந்த வரி விதிக்கப்பட்டது. மீசை, தாடி வரி செலுத்தியவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அவர்கள் அந்த டோக்கனை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்
1696 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் ஜன்னல் வரி வசூலிக்கப்பட்டது. இதன்படி, வீட்டில் 10 ஜன்னல்களுக்கு மேல் இருந்தால் 10 வெள்ளி வரி செலுத்த வேண்டும். ஆனால், மக்களின் எதிர்ப்பால் 1851-ம் ஆண்டு இந்த வரி ரத்து செய்யப்பட்டது.
டிசம்பர் 20, 1820 இல், திருமணமாகதவர்கள் வரி செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது. திருமணம் செய்து கொள்ளாத ஆண்களுக்கு ஆண்டுதோறும் $1 வரி விதிக்கப்பட்டது.
மே 2022 இல், நியூசிலாந்து அரசாங்கம் கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் வாயு வெளியீட்டிற்கு வரி விதிக்க முடிவு செய்தது. சுற்றுச்சூழலைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு இது என்று கூறப்படுகிறது.
பால் உற்பத்தியில் உலகின் முதல் 10 நாடுகளில் உள்ள நியூசிலாந்து, பசுக்கள் உட்பட மற்ற கால்நடைகளுக்காக புதிய மற்றும் விசித்திரமான சட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த முடிவின்படி, விவசாயிகள் அல்லது அவற்றின் உரிமையாளர்கள் மாடுகள் உட்பட மற்ற கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் வாயுவுக்காக வரி செலுத்த வேண்டும்.