கும்பத்தில் சனி உதயம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... பணம், பதவி, புகழ், அனைத்திலும் வெற்றி
மேஷம்: ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் சனி உதயத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மேஷ ராசிக்காரர்கள் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவீர்கள். எதிரிகள் தோற்கடிக்கப்படலாம். தொழில் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்பின் முழுமையான பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ரிஷபம்: இந்த காலகட்டத்தில், ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் ஆளுமையால் அனைவரையும் ஈர்ப்பார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடின உழைப்பின் பலன் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபட்ட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு அதிகமாகும்.
மிதுனம்: கும்ப ராசியில் சனி உதயமாவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு திடீர் பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உங்களின் பல பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். தந்தையின் உடல்நிலையில் சற்று கவனம் தேவை.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சனியின் உதயம் வாழ்வில் கலவையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் அதிகப்படியான அக்கறை தேவை. முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் சனியின் உதயத்தின் தாக்கத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பல புதிய பணிகளிலும் வெற்றி பெறுவீர்கள். இக்காலகட்டத்தில் தொழில் சம்பந்தமான சில பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
கன்னி: கும்பத்தில் சனியின் உதயத்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு உடல்நலம் தொடர்பான விஷயங்களில் நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் தீரும். சட்ட சிக்கல்களில் வெற்றி கிடைக்கும். பணி இடத்தில் கடின உழைப்பின் பலன் கிடைக்கும். கடன் வாங்குவதை இப்போது தவிர்ப்பது நல்லது.
துலாம்: சனி உதயத்தின் தாக்கதால் குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். பொருளாதார நிலை மேம்படும், நிதி நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் மாற்றங்களைக் காணலாம். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது, வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்: கும்பத்தில் சனி உதிப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். இன்னும் பல வேலைகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தொழில் ரீதியாக சில பயணங்களை மேற்கொள்வீர்கள். இதனால் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி இடையே உள்ள பிரச்சனைகள் தீரும். எதிரிகளிடம் சற்று கவனமாக இருங்கள்.
தனுசு: சனி உதயத்தின் தாக்கத்தால், தனுசு ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். நீண்ட நாட்களாக சில நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களும் இந்தக் காலத்தில் நிவாரணம் பெறலாம். சட்ட சிக்கல்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடின உழைப்பின் மூலம் உங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் சனியின் உதயத்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த உங்களின் பல பணிகள் இந்தக் காலக்கட்டத்தில் வெற்றிகரமாக முடிவடையும் வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை மேம்படும். வியாபாரத்யில் லாபம் கிட்டும்.
கும்பம்: 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கும்ப ராசியில் சனி உதயமாகப் போகிறார். உத்தியோகத்தில் இருப்பவர்கள்ம் இந்த காலகட்டத்தில் பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவீர்க்கள். உங்கள் மேல் அதிகாரிகள் மற்றும் உடல் பணிபுரிபவர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். இந்தக் காலக்கட்டத்தில் அனைத்து பணிகளையும் சிறப்பாகச் செய்து வெற்றி பெறுவீர்கள். இது உங்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். திருமண உறவுகளில் முன்னேற்றம் காண்பீர்கள். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
மீனம்: சனியின் உதயத்தால், மீன ராசிக்காரர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்து முடியும், ஆசைகள் நிறைவேறும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். உங்கள் உடல்நிலையிலும் அலட்சியமாக இருக்காதீர்கள். ஏழை மக்களுக்கும் சிறப்புத் தொண்டு செய்யுங்கள். கவனம் செலுத்தினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.