அழகை பேரழகாக்கும் மாதுளையின் முத்தான சத்தான ஜூஸ்
மாதுளை ஆன்டிஆக்ஸிடன்ட்களின் பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள சில பொருட்கள் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது தவிர, மாதுளையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் உள்ளன. இவை வைரஸ் தொற்றுகளில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். மாதுளை சாற்றை காலை உணவுடன் அல்லது மதிய உணவிற்கு பின் உட்கொள்ளலாம். புதினா இலைகள், இஞ்சி மற்றும் கருப்பு உப்பு ஆகியவற்றை மாதுளை சாற்றில் சேர்க்கலாம்.
மாதுளையில் காணப்படும் வைட்டமின் சி, சருமத்தில் கொலாஜன் உருவாகும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தோல் நிறமி மற்றும் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. முகத்தின் பொலிவை அதிகரிக்கிறது.
மாதுளை உட்கொள்வது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். மாதுளையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது.
மன அழுத்தத்தை குறைத்து தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் மாதுளை, தூங்குவதில் சிக்கல் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மாதுளை சாறு அருந்தலாம். மாதுளையில் உள்ள மக்னீசியம் சத்து நன்றாக தூங்க உதவுகிறது