கொலஸ்ட்ராலை ஒரேடியா ஓடவிடனுமா? அப்போ இந்த சூப்பர் வீட்டு வைத்தியம் மட்டும் போதும்
ஆயுர்வேதத்தில் திரிபலா கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலை குறைக்கும்.
பூண்டு அதிக கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். இதில் உள்ள அல்லிசின் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது, மேஉமி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது உதவும்.
மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குக்குலு கொலஸ்ட்ரால் குறைக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதை உட்கொள்வதன் மூலம் அதிக கொலஸ்ட்ரால் அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம்
தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். நடைபயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளை ஊக்குவிப்பது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.