Liver Health: கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் சில அறிகுறிகள்!
உடலின் டீடாக்ஸ் பேட்டரியாக செயல்படும் கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், அதனை உடனடியாக சரி செய்வது நல்லது. அலட்சியம் செய்தால் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம். இந்நிலையில், கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் சில அறிகுறிகளை அறிந்து கொள்ளலாம்.
கல்லீரல் பாதிப்பு இருந்தால், நச்சுக்கள் சரியாக வெளியேறாமல், வயிற்றில் திரவம் சேர்ந்து விடும். இதனால் வயிற்றுப் பகுதியில் வீக்கம் காணப்படும். வயிறு பெருத்து வருவது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
பாதங்களில் அடிக்கடி வீக்கம் அல்லது கூச்ச உணர்வு ஏற்பட்டால், அதனை அலட்சியம் செய்யாமல், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்யவும். இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
கல்லீரல் பாதிப்பு இருந்தால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். கல்லீரல் உடலை சரியாக டேட் செய்யாத போது, ரத்தத்தில் அழுக்குகள் நச்சுக்கள் சேர தொடங்கும். இது தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.
கல்லீரல் சரியாக செயல்படாவிட்டால், செரிமானம் சரியாக நடக்காது. இதனால் குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். அடிக்கடி குமட்டல் அல்லது வாந்தி பிரச்சினை ஏற்பட்டால், உடனே கல்லீரலை பரிசோதனை செய்து கொள்ளவும்.
கல்லீரல் தொடர்பான நோய்களை தடுக்க, ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கத்தை கடைபிடிப்பதோடு, மதுப்பழக்கம் இருந்தால் அதையும் கைவிட வேண்டும். முக்கியமாக கொழுப்பு நிறைந்த உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இன்றி கண்டபடி நீங்களே மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.