Rasipalan: குரோதி ஆண்டு ஆனி மாதம் 19ம் நாள் புதன் கிழமை ஜூலை 3 ராசிபலன்கள் அதிர்ஷ்ட ராசிகள்!

Wed, 03 Jul 2024-8:58 am,

Daily Rasipalan 2024 July 3 : எந்தெந்த ராசிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...   இது ஆனி 19ம் நாள் தேய்பிறை திரியோசதசி, ரோகிணி நட்சத்திரம் கூடிய 03-07-2024 நாளுக்கான ராசிபலன்கள்

ஆரோக்கியம் மேம்படும். கலைத்துறையில் சாதகமான சூழல் ஏற்படும், கருத்து வேறுபாடுகள் மறையும்.  நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் சமூகத்தில் மதிப்பு உயரும்.

உறவுகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் மதிப்பு அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதும் உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமைவதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.  

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் நிம்மதி பிறக்கும். புண்ணியத்தைத் தேடுவதற்கும், கோவில்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் கைகூடி வரும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். சேமிப்புகளின் மூலம் ஆதாயங்கள் அதிகரிக்கும்

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உணவு மீதான விருப்பம் அதிகரிக்கும், ஆனால் அது உடலுக்கு ஒத்துக் கொள்ளுமா என்பதை கவனித்து முடிவெடுக்கவும். உத்தியோகத்தில் ஏற்படும் புதிய பொறுப்புகள் நல்ல மரியாதையை பெற்றுத் தரும்

சுப நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி ஏற்படும். விட்டுக் கொடுத்துச் செல்வதும் மகிழ்ச்சி தரும் என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். விலகிச் நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சமூகத்தில் செல்வாக்கு உயரும். முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்தும் சிந்தனைகள் வலுப்பெறும்

நீண்ட காலமாக தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும். சுப காரியங்களில் பொறுமையைக் கையாளவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களிடம் வேலை வாங்கும்போது நிதானம் அவசியம், மனதில் நிம்மதி தோன்றும் நாள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link