பொங்கல் 2025: இலவச வேட்டி, சேலை குறித்து தமிழக அரசு புதிய உத்தரவு! மக்கள் மகிழ்ச்சி
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா வேட்டை, சேலைகள் குறித்து புதிய உத்தரவு. அதுக்குறித்து விவரங்களை பார்ப்போம்.
2025 பொங்கல் பண்டிகை இன்றும் மூன்று வாரத்தில் வர இருக்கிறது. அதற்காக பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். பொங்கல் தினத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்தும், மாட்டுப் பொங்கல் தினத்தன்று மாடுகளை வழிபட்டும் கொண்டாடி வருகிறார்கள். எனவே பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரேஷன் அட்டை வைத்திருக்கக்கூடிய குடும்பங்களுக்கு மூன்று சிறப்பு பொருட்கள் இடம் பெற்றுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகைக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், கரும்பு கொண்ட பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வழங்குவதற்கு ரேஷன் கடைகளுக்கு வேட்டை மற்றும் சேலைகளை ஜனவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெறப்பட்ட இலவச வேட்டை, சேலைகள் கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும் கிராமப்புறம் மற்றும் நகரப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டு, சேலைகள் வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான 1 கோடியே 77 லட்சத்து 6 ஆயிரத்து 476 சேலைகளும், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 905 வேட்டைகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்காக ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இலவச வேட்டை, சேலைகளை ஜனவரி மாதம் 10 ஆம் தேதிக்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தி உள்ளது இதனை அடுத்து 2.50 லட்சம் நெசவாளர்களிடமிருந்து பெறப்பட்ட இலவச வேட்டு, சேலைகள் கிடங்கு மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2025 பொங்கல் பண்டிகைக்கு ஏறத்தாழ 1.75 கோடி சேலைகளும், 1.77 கோடி வேட்டைகளும் வழங்கப்பட உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.