உயர் ரத்த அழுத்த பிரச்சனையா? குறைக்க உதவும் தேநீர் வகைகள்!
க்ரீன் டீ உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பலவிதமான ஆரோக்கிய சிக்கல்களை சரிசெய்ய உதவுகிறது. தினமும் இரண்டு கப் அளவு தேநீர் குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இந்தியாவில் கிராமப்புறங்களில் பலரது வீடுகளிலும் உள்ள செம்பருத்தி பூவில் ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை நிறைந்துள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் இந்த செம்பருத்தி தேநீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
சீனாவில் மிகவும் பிரபலமான ஓலாங் டீ உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்ததொரு தீர்வாகும், இதனை பிளாக் மற்றும் க்ரீன் டீ கலந்த கலவை என்றும் சொல்லலாம்.
சாமந்தி பூ பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி பலவித ஆரோக்கிய நண்மைகளை தருகிறது, இது செம்பருத்தி தேநீரை போன்றே ரத்த ஓட்டத்தை சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
பிளாக் டீ இந்திய மக்கள் பலரின் விருப்பமான ஒன்றாக இருக்கிறது, இந்த தேநீரை குடிப்பது உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விடுபட உதவுகிறது.