போன் ரொம்ப சூடாகிறதா... இந்த டிப்ஸ்களை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..!!
தொலைத்தொடர்பு சாதனமாக மட்டுமல்லாமல், நமது முக்கிய ஆவணங்களை புகைப்படங்களை சேவிக்கும் சாதனமாகவும், பண பரிவர்த்தனை உட்பட நமது பல அன்றாட பணிகள் பலவற்றிற்கும் நான் ஸ்மார்ட் ஃபோன்களையே நம்பி இருக்கின்றோம்.
பலவகையில் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மார்ட்ஃபோன்களை நாம் பத்திரமாக பாதுகாப்பது அவசியம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் பலவகையில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று, தொலைபேசி அதிக அளவில் வெப்பமடைவது.
Smartphone Overheating Problem: ஸ்மார்ட் போன் வெப்பமடைவது, ஃபோனையும் பேட்டரியையும் சேதப்படுத்தும் என்பதோடு ஆபத்தாகவும் முடியலாம். செல்போன்கள் வெடிப்பதால் ஏற்படும் சம்பவங்கள் அடிக்கடி நாம் செய்திகளில் காண்கிறோம்.
செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும் போது செல்போனும், பேட்டரியும் சூடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பிரைட்னஸை குறைவாக வைத்திருத்தல்: போன் பிரைட்னஸ் அதிகமாக இருப்பதும் செல்போனை சூடாக்கும். அதிக அளவிலான பிரகாசம் காரணமாக, பேட்டரி திறனும் அதிகம் செலவாகும்.
பயன்பாட்டில் இல்லாத செயலியை மூடுதல்: ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தும் போது, பின்னணியை இயங்கும் தேவையில்லாத செயலிகளை மூடுவதால், செல்போன் சூடாவது தடுக்கலாம். பேட்டரி செலவும் மிச்சமாகும்
செல்போனை தொடர்ந்து அப்டேட் செய்வதன் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனின் செயல் திறம் மேம்படுவதோடு, பேட்டரியும் சூடாகாமல் இருக்கும். அவ்வப்போது அப்டேட் செய்வது போனை வெப்பமடையாமல் இருக்க உதவும்.
வெப்பமான இடங்களில் வைப்பதை தவிர்த்தல்: ஸ்மார்ட்போன்களை வெப்பம் அதிகம் இருக்கும் இடங்களில் வைப்பதை தவிர்ப்பது நல்லது.நேரிடையாக சூரிய ஒளியில் படும் படியோ அல்லது சூடான இடங்களிலோ வைக்கக் கூடாது.