Atal Tunnel: உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை குகை பாதைக்கு சென்று வரலாம்
அடல் சுரங்கம் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை குகை பாதையாகும். இது 9.02 கி.மீ நீளம் கொண்டது. லாஹோல்-ஸ்பிட்டி பள்ளத்தாக்கு இந்த சுரங்கப்பாதை வழியாக ஆண்டு முழுவதும் மணாலியுடன் இணைக்கப்பட்டிருக்கும். முன்னதாக இந்த பள்ளத்தாக்கு சுமார் 6 மாதங்கள் கடுமையான பனிப்பொழிவு காரணமாக துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த சுரங்கப்பாதை இமயமலையின் பிர் பஞ்சால் வரம்பில் சராசரி கடல் மட்டத்திலிருந்து (எம்.எஸ்.எல்) 3,000 மீட்டர் அல்லது 10,000 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை மணாலிக்கும் லேக்கும் இடையிலான சாலை தூரத்தை 46 கிலோமீட்டர் குறைத்துள்ளதுடன், இரு இடங்களுக்கிடையிலான பயண தூரம் சுமார் 4 முதல் 5 மணி நேரம் மிச்சப்படுத்துகிறது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் கனவாக இருந்த இந்த திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை, எல்லை சாலைகள் அமைப்பு அமைத்துள்ளது. ரூ .3,200 கோடி செலவில் 10 வருட கடின உழைப்புக்குப் பிறகு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அடல் சுரங்கப்பாதையில் ஒரு நாளைக்கு 3,000 கார்கள் மற்றும் 1,500 லாரிகள் பயணம் செய்யலாம். அதிகபட்சமாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். சுரங்கப்பாதையில் அதி அநவீன கருவிகள் மூலம் காற்றோட்ட வசதி, கண்காணிப்பு வசதி ஆகியவை மேற்கொள்ளப்படும். தீயணைப்பு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன
அடல் சுரங்கப்பாதை மணாலியில் இருந்து 25 கி.மீ தூத்தில் 3060 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இது ஒரு குதிரை ஷூ வடிவத்தில் அமைந்துள்ளது.
இந்த சுரங்கப்பாதை மூலம், பைக் மூலம் லஹோல் ஸ்பிதிக்கு செல்லும் பயணம் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். டெல்லியில் இருந்து 550 கி.மீ தொலைவில் இந்த இடம் உள்ளது. தில்லியிருந்து லாஹோல் ஸ்பிதி செல்ல சுமார் 13 மணி நேரம் ஆகும்.