Personal Loan: கடன் வாங்கும் ஐடியா இருக்கா... இந்த வங்கிகளில் குறைந்த வட்டி - முழு விவரம்!
யூனியன் வங்கி: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் ரூ. 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 9.3 சதவீதத்தில் இருந்து 13.4 சதவீதம் வரை மாறுபடும். வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, மாதத் தவணை ரூ. 2090 முதல் 2296 வரை இருக்கலாம். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கடன் தொகையின் 0.5 சதவீத செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது.
இந்தியன் வங்கி: இந்தியன் வங்கியின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 10 சதவீதம் முதல் 12.4 சதவீதம் வரை மாறுபடும். வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, மாதத் தவணை ரூ. 2125 முதல் ரூ. 2245 வரை இருக்கலாம். இந்தியன் வங்கி கடன் தொகையின் 1 சதவீத செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடம் இருந்து எந்த செயலாக்கக் கட்டணத்தையும் வங்கி வசூலிக்காது.
HDFC வங்கி: HDFC வங்கியின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 10.35 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை மாறுபடும். வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, மாதத் தவணையில் ரூ. 2142 முதல் ரூ. 2705 வரை இருக்கலாம். HDFC வங்கி கடன் தொகையின் 2.5 சதவீத செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது.
ஆக்சிஸ் வங்கி: ஆக்சிஸ் வங்கியின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 10.49 சதவீதம் முதல் 13.65 சதவீதம் வரை மாறுபடும். வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, மாதத் தவணை ரூ.2149 முதல் ரூ.2309 வரை இருக்கலாம்.
ஐசிஐசிஐ வங்கி: ஐசிஐசிஐ வங்கியின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 10.75 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை மாறுபடும். வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, மாதத் தவணை ரூ. 2,162 முதல் ரூ. 2,594 வரை இருக்கலாம். ஐசிஐசிஐ வங்கி கடன் தொகையில் 2.5 சதவீதம் செயல்முறைக் கட்டணத்தை வசூலிக்கிறது.
எஸ்பிஐ: நீங்கள் எஸ்பிஐ வங்கியில் இருந்து தனிநபர் கடனைப் பெற விரும்பினால், 11 சதவீதத்தில் இருந்து 14 சதவீத வட்டி விகிதத்தை நீங்கள் செலுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கடன் தொகையில் உங்கள் மாதத் தவணையில் ரூ.2174 முதல் ரூ.2327 வரை மாறுபடும். வங்கி கடன் தொகையில் 1 .5 சதவீதத்தை செயலாக்க கட்டணமாக வசூலிக்கிறது.