மிகவும் ஆபத்தான WhatsApp அம்சங்களை உடனடியாக மாற்றவும்! இல்லையெனில் ...

Tue, 17 Nov 2020-2:02 pm,

உங்கள் வாட்ஸ்அப்பில் உள்ள புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை தானாகவே சேமிக்கும் வசதி இருக்கிறதா?  உடனடியாக அந்த அமைப்புகளை (setting) மாற்றவும். புகைப்படங்கள் சில நேரங்களில் ட்ரோஜன் ஹார்ஸ்-ஐ (Trojan horse) போலவே செயல்படும். அதன் உதவியுடன், ஹேக்கர்கள் உங்கள் ஸ்மார்ட்போனை எளிதில் ஹேக் செய்யலாம் என்று சைபர் நிபுணர்களின் கூறுகின்றனர்.

இதனைத் தவிர்க்க, உடனடியாக உங்கள் வாட்ஸ்அப்பின் setting-இல் சில மாற்றங்களைச் செய்யவும். முதலில் settingக்கு சென்று, close the Save to Camera Roll என்ற தெரிவை மூடிவிடவும்.

Apple போன்கள், பிற வகை கைப்பேசிகளை விட அதிக பாதுகாப்பானவை என்று கூறப்படுகிறது. ஆனால் iCloud-இல் ஒருபோதும் வாட்ஸ்வாட்ஸ்அப்புடன் இணைக்கக்கூடாது, வாட்ஸ்அப்பின் தரவுகளை ஐ-க்ளவுடில் சேமிக்கக்கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தவொரு வாட்ஸ்அப் chat-வும் iCloud க்குச் சென்ற பிறகு ஆப்பிளின் சொத்தாக மாறிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ICloud-க்கு சென்ற பிறகு, உங்கள் chat மறைகுறியாக்கப்படுகிறது (decrypted). அதாவது உங்கள் ஆப்பிள் கைப்பேசியில் வைத்துள்ள WhatsApp chat-களை பாதுகாப்பு முகவர்கள் எடுக்க முடியும். 

வாட்ஸ்அப் சமீபத்தில் தானாகவே செய்திகளை நீக்கும் சிறப்பான அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது செய்திகளை தானாகவே நீக்கும் விருப்பம். ஆனால், உண்மையில் இது உங்கள் privacy-க்கு ஆபத்தான அம்சமாகும். எடுத்துக்காட்டாக, வாட்ஸ்அப்பில், தானாக நீக்கப்படும் செய்திகள் குறைந்தது 7 நாட்களுக்கு இருக்கும். ஆனால், அது உங்கள் செய்திகள் அறிவிப்பில் இருக்கும், அதே போல் வேறு பிற பயனர்களும் இந்த chat-களை படிக்கலாம். அதுமட்டுமல்ல, நீங்கள் நீக்கிவிட்ட அல்லது தானக நீங்கிவிட்ட செய்தியை பார்த்த பயனர் அதை backup-இல் வைத்திருக்கலாம்.உங்கள் பாதுகாப்பிற்காக, நீங்கள் உடனடியாக chat-களை நீக்குகிறீர்கள், ஆனால் உண்மையில் அதனால் பெரிய அளவில் எந்தவித பயனும் இல்லை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link