மூத்த குடிமக்களுக்கு பம்பர் வருமானத்தை அளிக்கும் வங்கிகள்: சிறப்பு திட்டங்களின் விவரம் இதோ
SBI-யின் சிறப்பு எஃப்டி திட்டமான ’வி கேர்' (We Care) திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 5 வருடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கு 0.30 சதவிகிதம் அதிக வட்டி கிடைக்கும். எஸ்பிஐ தற்போது 5 வருட எஃப்டி மீது 5.4% வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் சிறப்பு எஃப்டி திட்டத்தில் (We Care) டெபாசிட் செய்தால், அவர்களுக்கு ஆண்டுக்கு 6.20 சதவிகிதம் வட்டி கிடைக்கும். வீ கேர் திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டியோடு கூடுதலாக 0.30 சதவீதம் வட்டி கிடைக்கும்.
எச்டிஎப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு அதன் எச்டிஎஃப்சி சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி திட்டத்தில் 0.75 சதவிகிதம் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் எச்டிஎப்சி வங்கியில் ஒரு மூத்த குடிமகன் டெபாசிட் செய்தால், அவருக்கு 6.25 சதவிகிதம் எஃப்.டி கிடைக்கும். சாதாரண மக்கள் 5 வருட FD க்கு 5.50 சதவீத வட்டி பெறுகிறார்கள். இதில், மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் 0.50 சதவிகிதம் மற்றும் சிறப்புத் திட்டத்தில் 0.25 சதவிகிதம் என மொத்தம் 0.75 சதவிகிதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.
ICICI வங்கியின் சிறப்பு FD திட்டமான ICICI வங்கி கோல்டன் இயர்ஸ் FD திட்டத்தில் (ICICI Bank Golden Years FD scheme), மூத்த குடிமக்களுக்கு 0.80 சதவீதம் அதிக வட்டி கிடைக்கும். இதில், வங்கி 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கு, மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 6.30 சதவீத வட்டியை வழங்குகிறது. இந்த வங்கியில், பொது மக்கள் 5 ஆண்டுகளுக்கு மேலான வைப்புத்தொகைக்கு 5.50 சதவீத வட்டி பெறுகிறார்கள். இந்தத் திட்டத்தில் டெபாசிட் செய்தால், மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் 0.50 சதவிகிதம் வட்டியோடு, 0.30 சதவீதம் கூடுதல் வட்டியும் கிடைக்கும்.
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) மூத்த குடிமக்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தில் வைப்புத்தொகைக்கு 1.0 சதவீதம் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமகக்கள் சிறப்பு FD திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்தால், அவர்களுக்கு ஆண்டுக்கு 6.25 சதவீத வட்டி கிடைக்கும். 5 வருடங்களுக்கும் மேலான FD-களுக்கு பொது மக்களுக்கு 5.25 சதவிகித வட்டியை வங்கி வழங்குகிறது.