அதிக வட்டி தரும் டாப் வங்கிகள் இவைதான்! நல்ல வருமானம்!

Thu, 29 Apr 2021-9:52 pm,

சேமிப்புக் கணக்கு என்பது ஒரு வங்கி அல்லது பிற நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்யப்படும் வட்டியை உருவாக்கும் வைப்புக் கணக்கு. இந்த கணக்குகள் வழக்கமாக குறைந்த வட்டி விகிதத்தைக் கொண்டிருக்கின்றன என்ற போதிலும், அவற்றின் நிலைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை அவசர தேவைகளுக்கு மூலதனத்தை வைத்திருப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகின்றன.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) முதல் ICICI, HDFC போன்ற வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு (Saving Account) குறைவான வட்டியே வழங்குகின்றன. ஆனால் சிறு நிதி நிறுவனங்களில் இதற்கு அதிக வட்டி லாபம் கிடைக்கிறது. அந்தவகையில் அதிக வட்டி லாபம் தரும் டாப் வங்கிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.1 லட்சம் வரை - 3.5% வட்டி கிடைக்கும். ரூ.1 லட்சத்துக்கு மேல் - 7% வட்டி கிடைக்கும். கேபிடல் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கில் ரூ.1 லட்சம் வரை - 3.75% வட்டியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் - 3.75% வட்டியும் கிடைக்கும். ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் ரூ.1 லட்சம் வரை - 5% வட்டி கிடைக்கும், ரூ.1 லட்சத்துக்கு மேல் - 7% வட்டி கிடைக்கும். ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கில் ரூ.1 லட்சம் வரை - 3.5% வட்டி மற்றும் ரூ.1 லட்சத்துக்கு மேல் - 7% வட்டி கிடைக்கும்.

ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் இல் ரூ.1 லட்சம் வரை - 4% வட்டி, லட்சத்துக்கு மேல் - 6.5% வட்டி கிடைக்கும். சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் லட்சம் வரை - 4% வட்டி, ரூ.1 லட்சத்துக்கு மேல் - 6.25% வட்டி கிடைக்கும். உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், ரூ.1 லட்சம் வரை - 4% வட்டி, ரூ.1 லட்சத்துக்கு மேல் - 7% வட்டி கிடைக்கும். உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் இல் ரூ.1 லட்சம் வரை - 5% வட்டி, ரூ.1 லட்சத்துக்கு மேல் - 7.25% வட்டி பெறலாம். நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் இல் ரூ.1 லட்சம் வரை - 4% வட்டி, ரூ.1 லட்சத்துக்கு மேல் - 5.75% வட்டி. ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் இல் ரூ.1 லட்சம் வரை - 3.5% வட்டி, ரூ.1 லட்சத்துக்கு மேல் - 7.25% வட்டி கிடைக்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link