சந்திர தோஷம் போக்கும் திருவோண விரதம்! பூமிபிராட்டியை ஒப்பிலியப்பர் மணம் பூண்ட நன்னாள்!
மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால், ஏழு பிறவியிலும் பதினாறு வகையான செல்வங்களைப் பெற்று செழிப்புடன் வாழலாம்
மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக உலகில் பிறந்த பூமாதேவி நாச்சியாரை, ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். அதேபோல் பிராட்டியை ஒப்பிலியப்பன் மணந்துகொண்டதும் திருவோண நட்சத்திர தினத்தில் என்று புராணங்கள் சொல்கின்றன
இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவோண நட்சத்திரத்தன்று விரதம் மேற்கொள்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று வாழ்வார்கள்
திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது திருவோண நட்சத்திரத்தில்தான்
திருவோண விரதம் இருப்பவர்கள், காலையில் குளித்து விட்டு, பெருமாள் கோயிலுக்குச் சென்று, அவருக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். வீட்டில் வழிபடுபவர்கள், வீட்டில் உள்ள பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லி வழிபட வேண்டும். கோவிலில் துளசி தீர்த்தம் கொடுப்பார்கள், அதை தீர்த்தமாக பருகுவோம், அதேபோல கோவிலுக்கு செல்லாதவர்கள் துளசி தீர்த்தத்தை வீட்டிலேயே செய்து, நிவேதனம் செய்து விட்டு பருக வேண்டும்
ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில், பூமாதேவியை ஒப்பிலியப்பர் மணம் செய்து கொண்டதால், ஒப்பிலியப்பர் கோயிலில் திருவோண விழா மாதாமாதம் சிறப்பாக நடை பெறுகிறது.
பெளர்ணமி அன்று வரும் திருவோண நட்சத்திரத்தன்று விரதம் இருந்து, மாலையில் சந்திரனை தரிசித்தால், சந்திர தோஷம் இருந்தால், அது விலகிவிடும்
ஒரு முறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும், சந்திரனின் அருள் கிடைக்கும். இதன் மூலம் சந்திரனால் உண்டாகும் தோஷங்கள் விலகிவிடும் என்பதோடு, மனத்தெளிவு கிடைக்கும்