அதிக வேலை நேரம் கொண்ட டாப் 5 நாடுகள் : 52 மணி நேரம் வேலை, இந்தியா இல்லை
தைவான் - தைவானின் பொருளாதாரம், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தை பெரிதும் நம்பியிருப்பதால், அதிக வேலை நேரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியில் உள்ளது. தொழில்நுட்பத் துறையானது, ஒரு தீவிரமான போட்டித் தொழிலாக இருப்பதால், அடிக்கடி நவீன கண்டுபிடிப்புகள் அந்நாட்டில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கும். இங்குள்ள தொழிலாளர்கள் வாரத்திற்கு சராசரியாக 51.5 மணிநேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது.
சிங்கப்பூர் - மிகவும் வளர்ந்த பொருளாதாரத்திற்கு அறியப்பட்ட மற்றொரு புகழ்பெற்ற நாடான சிங்கப்பூர், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவற்றில் உற்பத்தி, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் நிதிச் சேவைகள் ஆகியவை அடங்கும். இந்தத் துறைகள் பெரும் செல்வத்தையும் வெற்றியையும் உறுதி செய்யும் அதே வேளையில், இதற்காக ஊழியர்கள் கிட்டத்தட்ட வாரத்திற்கு 51.9 மணிநேரம் சராசரியாக உழைக்க வேண்டும்.
ஹாங்காங் - வர்த்தகம் மற்றும் நிதி மையமாக அறியப்படும் ஹாங்காங், நீண்ட மற்றும் பரபரப்பான வேலை நேரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்று. இங்கு வாரத்திற்கு சராசரியாக 51.6 வேலை நேரத்தில் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) - ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதார வெற்றிக்கு முக்கிய காரணி, அதன் எண்ணெய் வளம், நிதி மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் அசுர வளர்ச்சி. இதற்காக அங்கிருக்கும் தொழிலாளர்கள் வாரத்துக்கு சராசரியாக 52.6 மணிநேரம் கட்டாயம் வேலை செய்தாக வேண்டும்.
மலேசியா - உற்பத்தி, விவசாயம் மற்றும் சேவைகள் துறைகளை உள்ளடக்கிய பல்வேறுபட்ட பொருளாதார துறைகளில் முன்னணியில் உள்ள நாடு. இங்கு சராசரி வேலை நேரம் வாரத்திற்கு சுமார் 52.2 மணிநேரம் ஆகும்.